`ஒத்துழைக்கவில்லை என்றால் அவ்வளவுதான்!’-மர்ம உறுப்பை அறுத்துவிடுவேன்!!: சைக்கோ கில்லரின் அதிர்ச்சி வாக்குமூலம்

0
184

சென்னை மாதவரத்தில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகளை அறுத்த வழக்கில் சைக்கோ கில்லரான மானாமதுரையைச் சேர்ந்த முனுசாமியை போலீஸார் கைது செய்தனர். கைதான முனுசாமி,

எதற்காக அப்படிச் செய்தேன் என போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மே 25 அன்று காலையில் மாதவரம் பகுதியில் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் ரெட்டேரி, திருவள்ளூர் நகரைச் சேர்ந்த அஸ்லாம் பாஷா மீட்கப்பட்டார்.

அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மே 31-ம் தேதி இறந்தார். அஸ்லாமின் மனைவி பல்கீஸ் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் “தன் கணவர், நோன்பு கடைப்பிடிப்பதால் மதுகுடிப்பதில்லை. போலீஸார் தவறான தகவல்களைச் சொல்கின்றனர்” என்று புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மாதவரம் உதவி கமிஷனர் ராமலிங்கத்தை விசாரிக்க உத்தரவிட்டிருந்தார்.

மாதவரம் இன்ஸ்பெக்டர் ஜவஹர், சப்-இன்ஸ்பெக்டர் ஆன்ட்ரின் ரமேஷ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஜுன் 3-ம் தேதி காலையில் நெல்லையைச் சேர்ந்த நாராயணனின் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டது.

இந்தச் சம்பவமும் அதே இடத்தில் நடந்ததால் போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மர்ம உறுப்புகளை அறுப்பது சைக்கோ கில்லர் என போலீஸார் கருதினர்.

நாராயணனிடம் போலீஸார் விசாரித்தபோதுதான் சைக்கோ கில்லர் குறித்து முக்கிய தகவல் தெரியவந்தது.

தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது வெள்ளைச் சட்டை, வேட்டி அணிந்த நபர் ஒருவர், அவ்வழியாகச் செல்பவர்களிடம் பேசும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த நபரின் புகைப்படத்தை நாராயணனிடம் போலீஸார் காண்பித்தபோது அவர் சைக்கோ கில்லரை அடையாளம் காட்டினார்.

சைக்கோ கில்லர் குறித்த தகவல் கிடைத்ததும் அவர் யார், எங்கு தங்கியுள்ளார் என்ற விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.

விசாரணையில் சைக்கோ கில்லர், வில்லிவாக்கத்தில் தங்கியிருக்கும் தகவல் தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் அவரைப்பிடித்தனர்.

அவரின் பெயர் முனுசாமி (35), மானாமதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம்.

சுமார் 8 கி.மீட்டர் தூரம் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் வெள்ளை நிறச் சட்டை, வேட்டி அணிந்த நபர் பைக்கில் செல்லும் இரண்டு பேரிடம் பேசும் காட்சி பதிவாகியிருந்தது.

அந்த நபரின் நடவடிக்கைகள் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த சிசிடிவி. கேமரா பதிவுகளில் அந்த நபரின் நடவடிக்கைகளை கண்காணித்தோம்.

இந்தச்சமயத்தில் சிகிச்சை பெற்று வரும் நாராயணனிடம் வெள்ளை நிற வேட்டி, சட்டை அணிந்த நபரின் புகைப்படத்தை காண்பித்தோம்.

 m2_11032

அப்போது நாராயணன், என்னுடைய இந்த நிலைமைக்கு இவர்தான் காரணம் என்று கூறினார்.

ஆனால், அவருக்கு அந்த நபர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து வெள்ளை நிறச் சட்டை, வேட்டி அணிந்தவரின் புகைப்படத்தை கையில் எடுத்துக்கொண்டு தனிப்படை போலீஸார் ஒவ்வோர் இடமாக தேடினர்.

சில தினங்களுக்கு முன், ராஜமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே சப்-இன்ஸ்பெக்டர் ஆன்ட்ரின் ரமேஷ், அந்த நபர் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டரின் தலையில் சிலர் அடித்துள்ளனர். அதுதொடர்பாக சிலரை கைதுசெய்துள்ளோம்.

மர்ம உறுப்புகளை அறுத்த நபர் குறித்து எந்தத் துப்பும் துலங்காத நிலையில் அவரை எளிதில் கண்டறிவது தொடர்பாக உயரதிகாரிகளிடம் ஆலோசித்தோம்.

அப்போது, இந்த நபரின் புகைப்படத்தை மீடியா மூலம் தெரியப்படுத்தினால் எளிதில் பிடித்துவிடலாம் என்று தனிப்படை போலீஸார் கூறினர்.

அதற்கு உயரதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி நேற்று அந்த நபரின் புகைப்படம், சிசிடிவி காட்சிகள் மீடியாக்களுக்கு அனுப்பி வைத்தோம்.

உடனடியாக புகைப்படம், வீடியோவுடன் செய்திகள் வெளியாகின. செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே வெள்ளை நிறச் சட்டை, வேட்டி அணிந்தவரை வில்லிவாக்கத்தில் பார்த்ததாக தனிப்படை போலீஸாருக்கு போனில் தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு சென்று மர்ம உறுப்புகளை அறுத்த முனுசாமியைப் பிடித்துவிட்டோம்” என்றனர்.

 m6_11243

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “முனுசாமி, மீன்கடையில் வேலை பார்த்துவருகிறார்.

சிறுவயது முதல் தன்பாலின சேர்க்கை பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். அவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இருப்பினும் அந்தப்பழக்கத்திலிருந்து முனுசாமி விடுபடவில்லை. வேலை முடிந்ததும் மதுஅருந்தும் முனுசாமி, சம்பவ இடத்துக்கு  வருவார்.

அப்போது அவ்வழியாகச் செல்பவர்களிடம் முதலில் பேசுவார். தன்பாலினச் சேர்க்கைக்கு வெளிப்படையாகவே முனுசாமி அழைப்பார். அதற்கு சம்மதிப்பவரை அழைத்துக் கொண்டு மறைவான இடத்துக்குச் செல்வார் முனுசாமி.

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டால் கத்தியை எடுத்து மர்ம உறுப்பை அறுத்துவிட்டு தப்பிவிடுவார்.

இப்படிதான் அஸ்லாம் பாஷாவும் நாராயணனும் முனுசாமியிடம் சிக்கியுள்ளனர். தற்போது அஸ்லாம் பாஷா இறந்துவிட்டதால் முனுசாமி மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்துள்ளோம்” என்றார்.

muniyasamy_sex_killer_12071முனுசாமி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “மானாமதுரையில் நான் வசித்தபோதுதான் நண்பர்கள் மூலம் இந்தப்பழக்கத்துக்கு நான் அடிமையானேன்.

அதன்பிறகு அதிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. வேலை தேடி சென்னை வந்தேன்.

மீன் கடையில் வேலை பார்த்தேன். தனிமையில் இருந்த நான், மது அருந்தியதும் தன்பாலின சேர்க்கைக்கு ஆள்தேடுவேன். என்னோடு ஒத்துழைப்பவர்களை ஒன்றும் செய்ய மாட்டேன். ஆனால், ஒத்துழைக்காதவர்களைத்தான் அப்படி செய்வேன்” என்று கூறியுள்ளார்.

தன்பாலின சேர்க்கை விவகாரத்தில் முனுசாமி கைதான சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.