தர்பாரில் கலக்கும் ரஜினியும் பேரனும்

0
83

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சென்னையில் இருக்கிறார். இந்த மாத இறுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க இருக்கிறது.

இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, தலீப் தஹில், ப்ரதீக் பாப்பர் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தர்பார் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த், தனது இளைய மகள் சவுந்தர்யாவின் மகன் தேவ் கிருஷ்ணாவை தூக்கிக் கொண்டு வருவது போன்ற புகைப்படம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தாத்தாவையும், பேரனையும் எடுத்துள்ளார்.

என் ஐபோனில் உள்ள கேன்டிட் புகைப்படங்கள் இவை மட்டுமே என்று கூறி அந்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்

இந்த டுவிட்டைப் பார்த்த சவுந்தர்யா, “என்னுடைய உலகம் அப்பாவும், மகனும் தான்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.