வாங்கியது ஒரு டிக்கெட்.. பரிசு ரூ.18 கோடி -அபுதாபியில் இந்தியருக்கு அடித்த திடீர் யோகம்

0
335

திருவனந்தபுரம்:

அபுதாபியில் இருக்கும் மிகப்பெரிய  ‘Big Ticket’ எனும் நிறுவனம், பரிசு சீட்டு குலுக்கல் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் இந்த குலுக்கலில் ரூ.10 கோடிக்கும் மேல் பரிசு தொகையாக அறிவிக்கப்படும்.

அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான குலுக்கல் அபுதாபியில் வழக்கம்போல் நடைபெற்றது.
இதில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சய் நாத் என்பவருக்கு 10 மில்லியன் கிராம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18 கோடி ) பரிசாக  விழுந்துள்ளது.
201906070852057039_1_big-ticket._L_styvpf

‘Big 10’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த குலுக்கலில், 10 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் முதல் 5 இடங்களை இந்தியர்களே பெற்றுள்ளனர் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து சஞ்சய் நாத் கூறுகையில், ‘பரிசு விழும் என நம்பி இந்த குலுக்கல் பரிசு டிக்கெட்டை வாங்கவில்லை. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சாதாரணமாகதான் வாங்கினேன்.

ஆனால், இப்படி யோகம் அடிக்கும் என நினைக்கவில்லை. இந்த பணத்தில் பாதி என் குடும்பத்துக்கும், மீதியை ஏழை,எளிய மக்களுக்கும் பயன்படுத்துவேன்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

*