யாழ்பாணத்து பெண்ணை திருமணம் செய்த ‘Denmark நாட்டை’ சேர்ந்தவர் பேசும் அழகு தமிழ்!! கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்!

0
228

′செம்மொழியாம் தமிழ் மொழியின் இனிமை, செழுமை, வளம் கண்டு, அதன் பால் ஈர்க்கப்பட்டு, தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டவர் பலர்.

அதோடு நிற்காமல் தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்று தமிழ் புகழ் பாடியவர் பலர். இன்னும் சிலரோ, தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் சிறந்த முறையில் தங்கள் பங்கீட்டினை அளித்துள்ளனர்.

ஆனால், இன்று நமது தாய் மொழி தமிழை மறந்துவிட்டு வேற்று மொழியை பின்பற்றி அதை பெருமையாக பலரும் பேசிவருகிறனர்.

இன்று தமிழர்களின் சிறப்பை பலரும் உணர்வதும், மதிப்பதும் கூட இல்லை. அந்த அளவிற்கு வேற்று மொழிகள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.


ஆனால் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் ஈழத்து யுவதியை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அது மாத்திரம் இல்லை, 6 மாதத்தில் யாழ். தமிழை கற்று சரளமாக பேசியுள்ளார். இது யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு தெளிவாக ஆங்கிலம் சிறிதும் கலக்காமல் எப்படி இவ்வாறு சாதாரணமாக உரையாடுகின்றார் என்று. அதனை காணொளி எடுத்து சமூகவலைத்தளத்திலும் பதிவு செய்துள்ளார். நீங்களே அதனை பார்த்து ரசியுங்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.