48 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் நிதியமைச்சர்! – நிர்மலா சீதாராமனின் அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம்?

0
127

அரசியல் என்றாலே ஆண்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும் என்பதை உடைத்து, பெரிய அளவில் சாதித்த பல பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களின் வரிசையில் தற்போது, நிர்மலா சீதாராமனும் இடம்பிடித்துவிட்டார். பாதுகாப்புத் துறை, நிதித் துறை எனப் பெரும் துறைகள் இவரை நம்பி வழங்கப்பட்டுள்ளன.

ashnirmala_16456

முதல்முறையாக, இந்தப் பதவிகளில் இந்திரா காந்தி மட்டுமே இருந்தார்.

அவருக்கு அடுத்தபடியாக சுமார் 48 வருடங்களுக்குப் பிறகு இன்று மத்திய நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமனை ஒரு அரசியல் தலைவராக மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், அவரின் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ashnirmala_2_16032

நிர்மலா சீதாராமன்

1959-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி, தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரையில் பிறந்தார்.

இவரது தந்தை ஸ்ரீ நாராயணன் சீதாராமன், ரயில்வே துறையில் பணியாற்றியவர். தாய் சாவித்ரி.

இவரது அப்பாவின் பணியிட மாற்றம் காரணமாகத் தனது இளமைக் காலத்தைப் பல இடங்களில் கழித்த இவருக்கு, மாற்றங்களும் புதுமையை ஏற்றுக்கொள்ளும் பண்பும் இயல்பாகிப்போனது.

திருச்சியில் உள்ள சீத்தாலக்ஷ்மி ராமசுவாமி கல்லூரியில் தன் இளங்கலைப் பட்டத்தையும் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் முடித்துள்ளார்.

படிக்கும்போது, ஆந்திராவைச் சேர்ந்த பார்கல பிரபாகர் என்பவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

பார்கல பிரபாகர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். திருமணத்துக்குப் பிறகு இருவரும் லண்டனுக்குக் குடிபெயர்ந்தனர்.

அங்கு சிறிது காலம் இருந்துவிட்டு, 1991-ம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பினர். இந்தியா வந்த அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தது அரசியல் வாழ்க்கை.

ashnirmala_5_16169நிர்மலா சீதாராமன்

இந்தியா வந்த பிறகு, ஹைதராபாத்தில் பள்ளி ஒன்றை நிறுவினார். அதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சுஷ்மா ஸ்வராஜ், நிர்மாலா சீதாராமனின் பேச்சுத் திறமையைக் கண்டு அசந்துபோய், அவரை கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

அதன் பின்னர், பெண்கள் நல ஆணையத்தில் உறுப்பினராகப் பணியாற்றினார் நிர்மலா. 2006-ம் ஆண்டு, சுஷ்மாவின் அழைப்பை ஏற்று வெறும் பேச்சாளராகக் கட்சியில் சேர்ந்த இவர், பிற்காலத்தில் பா.ஜ.க-வின் முக்கியப் பேச்சாளராக உருவானார்.

இதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு, கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்கு எம்.பி-யானார்.

2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மோடிக்கும் பா.ஜ.க-வுக்கும் ஆதரவான இவரது பிரசாரம்தான் அமைச்சர் பதவிக்கான விதை.

அதற்கு நடுவே, ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் தன்னைப் பிரபலப்படுத்திக்கொண்டார்.

பின்னர், ஆந்திராவில் நெடுருமல்லி ஜனரதன் ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து, இவர் அம்மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, நிர்மாலா சீதாராமனுக்கு இந்தியாவின் மிகப் பெரிய துறையான பாதுகாப்புத் துறை வழங்கப்பட்டது.

அவர் பதவிவகித்த காலத்தில் பல சவாலான விசயங்களைத் துணிச்சலாக எதிர்கொண்டார். ரஃபேல் விவகாரம் தொடர்பாக இவர் நாடாளுமன்றத்தில் கூறிய விளக்கங்கள், இந்திய அளவில் அதிகமாகப் பேசப்பட்டது. நிர்மலாவின் நேரடி பார்வையின் கீழ் தான் பால்கோட் தாக்குதல் , பாகிஸ்தானிலிருந்து அபினந்தன் மீட்கப்பட்டது  போன்றவை நடந்தது.

அரசியலில் நுழைந்து  13 ஆண்டுகளுக்குள், நிர்மலாவுக்கு மத்திய அமைச்சரவையில் நிதித் துறை ஒதுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.

இதற்கான திறமை அவரிடம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. கண்டிப்பான முகமும் கராரான பேச்சும்கொண்ட இவருக்கு, தற்போது நிதித் துறையை கவனித்துக்கொள்ளும் முழுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.