நேபாள தலைநகர் காத்மண்டுவில் 4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ; 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

0
142

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மூன்று இடங்களில் குறித்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

‘வெடிமருந்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்களால் இந்த வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக’ நேபாள அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் பின்னணியில் மாவோ தீவிரவாதிகள் செயற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரையில் யாரும் இந்த சம்பவத்துக்கு உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.