13 வருஷம் வனவாசம் போனவங்கலாம் இருக்காங்க.. எங்களுக்கு 14 மாசம்தானே?’!

0
91

‘வென்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லலாம், தோற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு எங்களுக்கு நேரமில்லை’ மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுபற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல், ‘அரசியல் மாண்புப்படி வெற்றி பெற்ற கட்சிகளுக்கு, அதாவது மாண்புமிகு பிரதமருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

அதையும் விட ஒரு பெரிய கடமை மக்கள் நீதி மய்யத்துக்கு இருக்கிறது; 14 மாதங்களே ஆன இந்த குழந்தைக்கு கரிசனம் காட்டி எழுந்த நடக்க, ஓட விட்டதற்கும், எங்களிடம் இருந்து கடமையைத் தவிர, வேறு எதையும் எதிர்பாராமல் எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், அந்த வாக்குகளைப் பெறுவதற்கு நேர்மையான முறையில் நின்ற நாளைய வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் அரவணைப்பைப்பைக் கொடுத்த மக்களுக்கும் நன்றி’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் ‘எங்களுக்கு மக்களிடம் இருந்தும், பத்திரிகைகளிடம் இருந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. நல்லவழியில், நேர்வழியில் சென்றால் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை மக்கள் எங்களுக்கு தந்திருக்கிறார்கள்.

அரசியலில் ஏமாற்றம் என்று ஒன்றுமில்லை. 13 வருடம் வருடம் வனவாசத்தில் இருந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். எங்களுக்கு 14 மாதங்கள்தான் ஆகிறது.

இந்த தேர்தல் முடிவு எங்களுக்கு எவ்விதத்திலும் அயர்ச்சியை ஏற்படுத்தவில்லை. நெஞ்சை நிமிர்த்திதான் பேசுகிறோம்.

பாஜகவின் வெற்றி மக்களின் தீர்ப்புதான். ஆனால் தமிழக மக்களின் தீர்ப்பு இல்லை என்பதுதான் சந்தோஷம்’ என்றும் பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கமல் பேசும்பொழுது, இத்தனை பணப்புயலுக்கு நடுவெ, இந்த அளவுக்கு இலக்கைத் தொட்டதே எங்களுக்கு பெரிய விஷயம்.

வறுமையை வெல்வது கடினம் என்கிற பாடத்தை, இந்த பயணம் மூலமாக கற்றுக்கொண்டோம். தமிழ்நாடை இந்தியாவின் ஒரு பகுதியாகவும், வளமாகவும் வைத்திருக்க வேண்டியது பிரதமரின் கடமை என்பதுதான் தமிழ்க்குடிமகனாக இந்தியக் குடிமகனாக முன்வைக்க விரும்பும் வேண்டுகோள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘நாட்டின் நலனுக்காக ஹைட்ரோ கார்பன் வேண்டாம், இண்டஸ்ட்ரீ வேண்டாம் என்று சொல்லும் குணாதிசயம் மக்கள் நீதி மய்யத்துக்கு கிடையாது; அதை விவசாயம் செய்யும் நிலத்தில் வைக்க கூடாது என்றுதான் சொல்கிறோம்.

நாங்கள் விரும்புவது எழுச்சிமிகு முன்னோடி இந்திய மாகாணமாக தமிழகத்தை மாற்றுவது எங்கள் இலக்கு ’ என்றும் ‘அரசியல் எனக்குத் தொழில் அல்ல; எங்கயும் போகாதீங்கன்னு ஒரு நல்ல ஆபீஸ்ல உக்கார வையுங்க.

நான் அங்க வேலை பாக்குறேன். மற்ற வேலைகளை(கலைத்துறை) விட்டுவிடுகிறேன்’ என்றும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.