நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்

0
173

ஒருவரது சுய ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், ராகு, கேது போன்ற கிரகங்களை தவிர்த்து, மற்ற கிரகங்களில் ஒன்று தனியாக இருப்பது அல்லது அவை ஒன்றாக சேர்ந்து இருப்பது ஆகிய நிலைகளில் சுனபா யோகம் ஏற்படுகிறது.

செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

கனவுகளை நிறைவேற்றும் சுனபா யோகம்

ஒருவரது சுய ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், ராகு, கேது போன்ற கிரகங்களை தவிர்த்து, மற்ற கிரகங்களில் ஒன்று தனியாக இருப்பது அல்லது அவை ஒன்றாக சேர்ந்து இருப்பது ஆகிய நிலைகளில் சுனபா யோகம் ஏற்படுகிறது. சந்திரன் கடகத்தில் நிற்க இரண்டாம் வீடான சிம்மத்தில் குரு, சுக்ரன் போன்ற சுபகிரகங்களில் ஏதேனும் ஒன்று தனியாகவோ அல்லது இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்திருந்தாலும் அதிக நன்மைகள் உண்டாகும் என்பது பல ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும். சுனபா யோகத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே புத்திக்கூர்மையும், புகழும் உடையவராக இருப்பார்கள். பார்வை மற்றும் சப்தம் ஆகியவற்றால் கிடைக்கும் சந்தோஷங்களால் மகிழ்வார்கள்.

பிறரை வசீகரிக்கும் முகம் மற்றும் தோற்றம், அமைதியான சுபாவம் மற்றும் நேர்மறையான குணங்கள் நிறைந்தவர் களாக இருப்பார்கள். இவர்கள் எதையும் சுலபத்தில் புரிந்து கொள்ள கூடிய திறன் கொண்டவர்கள். பூர்வீக சொத்து இருந்தாலும், சுய முயற்சியால் செல்வத்தை ஈட்டுவார்கள். கலைகளில் ஆர்வமும் ஈடுபாடும் இருப்பதால் சில கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். சிலர் திரைப்பட நடிகர்களாகவும் இருப்பார்கள். அரசாங்க பணியில் குறைந்த காலத்திலேயே பிறரை நிர்வகிக்க கூடிய அதிகாரம் மிகுந்த பதவிகளை பெறுவார்கள். இளமையில் சிறிது கஷ்டப்பட்டாலும் பிற்கால வாழ்க்கை இன்பமானதாக இருக்கும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.