தலையில் காயத்துடன் இரு பிள்ளைகளின் தந்தையின் சடலம் மீட்பு

0
98

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மதுரைக்கடலை வீதியில் உள்ள பாலத்தின்கீழ் ஆண் ஒருவரின் சடலமும் மோட்டர்சைக்கிள் ஒன்றும் இன்று வெள்ளிக்கிழமை (24) காலை மீட்டகப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

காக்காச்சிவெட்டை பிரதேசத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான 39 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான  பாலசுந்தரம் கரிகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை (24) அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் களுவாஞ்சிக்குடியிலுள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்து வெளியேறியுள்ள நிலையில் காலையில் சாவலடி சந்தியிலிருந்து செல்லும் மதுரைக்கடலை வீதியில்  உள்ள பாலத்தின் கீழ் அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் தலையில் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் குறித்த சடலத்தை நேரில் சென்று பார்வையிட்ட பின் சடலத்தை  பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து சடலம் மட்டு போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.