வெசாக் போயா தினத்தை முன்னிட்டு 762 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

0
55

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அரச நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை வெலிக்கட சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இம்முறை 762 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமன்னிப்புக்கான அரச நிகழ்வுவில்  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல உள்ளிட்ட அமைச்சினதும் சிறைச்சாலை திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளில் 736 பேர் ஆண்களாக காணப்படும் அதேவேளை மிகுதி 26 பேரும் பெண் கைதிகளாவர். அதற்கமைய இம்முறை வெலிக்கடை சிறைச்சாலையை சேர்ந்த கைதிகள் 117 பேரும் பல்லேகெலே திறந்தவெளி சிறைச்சாலையை சேர்ந்த 62 பேரும் மஹர சிறைச்சாலை கைதிகள் 55 பேரும், அனுராதபுர சிறைச்சாலையின் கைதிகள் 50 பேர் உள்ளிட்ட பல்லன்சேன சிறை முகாமைச்சேர்ந்த கைதிகள் 53 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.