ஸஹ்ரானின் 17 பாதுகாப்பு இல்லங்கள், 7 பயிற்சி முகாம்கள் செயற்பட்ட இடங்கள் இவைகள்தான்!

0
114

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் தேவாலயங்கள், ஹோட்டல்களை மையப்படுத்தி பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

குற்றப் புலனயவுப் பிரிவு மற்றும் சி.ரி.ஐ.டி. எனபப்டும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரதன்வின் கீழ் முன்னெடுக்கபப்டும் விசாரணைகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அந்தந்தப் பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தேசிய பாதுகபபுக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (15) கூறினார்.

அத்துடன் பயங்கரவாதிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பு இல்லங்களும் 7 பயிற்சி முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கட்டுவபிட்டி, நீர்கொழும்பு, பாணந்துறை – சரிக்காமுல்லை, கொள்ளுப்பிட்டி, டெம்லஸ் வீதி – கல்கிஸை, வனாத்துவில்லு, எண்டேரமுல்லை – வத்தளை, மயூரா பிளேஸ் – கொழும்பு 6, சாய்ந்தமருது, மள்வானை, கலகெடிஹேன – திஹாரி, கொச்சிக்கடை – தலுவகொட்டுவ, வாழைச் சேனை – ரிதிதென்ன, குளியாப்பிட்டி, ஹெட்டிபொல, கட்டுபொத்த, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை பகுதிகளிலிருந்தே சி.ஐ.டி.யினரால் இந்த பாதுகாப்பு இல்லங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வனாத்துவில்லு, அம்பாந்தோட்டை, நுவரெலியா, நுவர கரப்பொல, மள்வானை, காத்தாண்குடி மற்றும் வாழைச் சேனை பகுதிகளிலேயே பயிற்சி முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.