தனது குழந்தையை ‘அடகு வைக்கமுயன்ற தந்தை- அமெரிக்காவில் சம்பவம்

0
52

அடகுக் கடை­யொன்­றுக்கு தனது குழந்­தை­யுடன் சென்ற ஒரு நபர் குழந்­தையை அடகு வைத்தால் எவ்­வ­ளவு பணம் கிடைக்கும் என கேட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

புளோ­ரிடா மாநி­லத்தின் சர­சோட்டா நகரில் கடந்த வாரம் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

ரிச்சர்ட் ஸ்லோக்கம் என்­ப­வரே தனது பெண் குழந்iயை அடகு வைக்க முயன்­றாராம்.

மேற்­படி அடகுக் கடையின் உரி­மை­யா­ள­ரான ரிச்சர்ட் ஜோர்டான் என்­பவர் இது தொடர்­பாக கூறு­கையில்,

அந்­நபர் தனது குழந்­தையை மேசை மீது வைத்­து­விட்டு ‘இதை நான் அடகு வைக்க முடி­யுமா?’ எனக் கேட்டார்.

‘இதை அவ்­வ­ள­வாக பயன்­ப­டுத்­த­வில்லை. ஏழரை மாத வயது. இது எந்­த­ளவு பெறு­ம­தி­யா­னது என நீங்கள் எண்­ணு­கி­றீ­ர்கள்?’ என அவர் வின­வினார் எனத் தெரி­வித்­துள்ளார். வேடிக்­கை­யான வீடி­யோ­வொன்­றுக்­காக தான் இவ்­வாறு செய்­த­தாக மேற்­படி குழந்­தையின் தந்­தை­யான ரிச்சர்ட் ஸ்லோக்கம் பின்னர் தெரி­வித்தார்.

எனினும் கடை உரி­மை­யா­ள­ரான ரிச்சர் ஜோர்டான் இதை வேடிக்­கை­யாக கரு­த­வில்லை. இது குறித்து அவர் பொலி­ஸா­ருக்குத் தகவல் கொடுத்தார். அதன்பின் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலர் ரிச்சர்ட் ஸ்லோக்­கமின் வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­டனர். குழந்­தையின் நலன் தொடர்பில் சமூக சேவைப் பிரி­வி­ன­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டது.

எனினும், ரிச்சர்ட் ஸ்லோக்கமுக்கு எதிராக உடனடியாக குற்றச்சாட்டு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Florida Man Who Tried to Pawn His Infant Son Says He Was Joking—’This Is Not Funny’

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.