விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் ஷாரூக் கான்! – ‘விஜய் 63’ அப்டேட்ஸ்

0
103

விஜய் நடித்துவரும் படத்துக்கான பட்ஜெட்டுக்கு முதலில் கடிவளம்போட்ட ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் இப்போது தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.

மெகா நட்சத்திரங்கள் கூட்டணி என்பதால் நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் சம்பளம் தவிர்த்து 150 கோடி ரூபாய் பட்ஜெட்டை ஒதுக்கியிருக்கிறதாம் ஏ.ஜி.எஸ். மும்பையில் வசிக்கும் அட்லியின் பெரிய இடத்துக் கூட்டாளிகள் வாயிலாக ஷாருக்கான் நட்பு கிடைத்து இருக்கிறது. அட்லியின் ‘மெர்சல்’ பட மேக்கிங்கைப் பார்த்து மெர்சல் ஆகிவிட்டாராம் ஷாரூக் கான்.

vijay_new_17318‘சார், ‘விஜய்-63′ படத்தில் மிகமிக முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. நீங்கள்தான் அதற்கு சரியான சாய்ஸ் ஃப்ளீஸ்…’ என்று அட்லி வைத்த வேண்டுகோள் ஷாரூக்கை யோசிக்க வைத்து இருக்கிறது.

மற்றொரு சந்திப்பில் கதையை முழுவதும் பொறுமையாகக் கேட்டவரிடம்’ `சார், உங்களுக்கு நெகட்டிவ் கேரக்டர். படத்தோட க்ளைமாக்ஸ்ல 15 நிமிஷம் மட்டும் நடிச்சுக் கொடுத்தா போதும்’ என்று கேட்டுக்கொண்ட அட்லியிடம் சடாரென்று சம்மதம் சொல்லிவிட்டாராம் ஷாரூக் கான்.

விஜய் 63′ படத்தின் படத்தில் விஜய், ஷாரூக் கான் பங்குபெறும் க்ளைமாக்ஸ் காட்சியை சென்னையில் உள்ள ஸ்டேடியத்திலோ, மும்பையில் உள்ள ஸ்டேடியத்திலோ படமாக்க முடிவெடுத்து உள்ளனர்.

விஜய்க்கு வில்லனாக நடிப்பதற்கு 5 நாள்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ஷாரூக் கான். அதற்காக அவருக்கான சம்பளம் என்ன தெரியுமா? ‘விஜய்-63’ படத்தின் இந்தி மற்றும் வடமாநில அனைத்து மொழிகளின் உரிமையையும் ஷாரூக் கானுக்கு சம்பளமாகத் தர சம்மதித்து இருக்கிறார்களாம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.