கொள்ளுப்பிட்டியில் ஸஹ்ரான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த குண்டுதாரிகள்

0
203

ஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழுவினர், கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றின் ஐந்தாம் மாடியிலுள்ள அறை ஒன்றில் தங்களது தலைவரான பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஸிம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் வெள்ளியன்று கூறினார்.

தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இருமாத காலத்துக்கு 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வாடகைக்கு தொடர்மாடிக் கட்டடத்தொகுதி ஒன்றில் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடு ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு தினத்திற்கு முதல்நாளே ஈஸ்டர் குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்ததாகத் தெரியவருகிறது.

சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது காயமடைந்த ஸஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா சாதியா ( 24) பொலிஸாரின் விசாரணைகளின் போது இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.