கர்ப்பமாக இருந்த போது கூட படுக்கை அழைத்தனர்

0
336

திரைத்துறையினர் பலர் தான் கர்ப்பமாக இருக்கும் போது கூட தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை சமீரா ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி. அதன் பின்னர் வேட்டை, அசல். நடுநிசி நாய்கள் என சில படங்களில் நடித்ததோடு, சில பாலிவுட் படங்களில் நடித்தார்.

இவருக்கு 4வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் வருத்தத்துடன் பேசும்போது, “தான் பிஸியாக நடித்து வந்த நிலையில் திடீரென நடிப்பிலிருந்து விலகினேன்.

ஆனால் தான் ஏன் சினிமாவிலிருந்து விலகினேன் என யாரும் கண்டு கொள்ளவில்லை.இது தான் சினிமா என அறிந்து கொண்டேன்.

திருமணம் ஆகி தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தும் திரைத்துரையில் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்தனர். பெண்களுக்கு சினிமா துறை பாதுகாப்பானது இல்லை. இந்த நிலை மாறவேண்டும். ஆனால் அது உடனே நடந்துவிடாது என சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

சமீரா ரெட்டி தற்போது 2வது முறையாக கர்ப்பமாக உள்ளார். கர்ப்பமாக உள்ள நேரத்தில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை செய்வது தவறில்லை. ஆனால் அரைகுறை ஆடைகளுடன் இந்த நேரத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவரை பெரிதும் விமர்சிக்கப்படும் பெண்ணாக தான் பார்க்கப்படுகின்றது.

சின்மயி, ஸ்ரீரெட்டி ஆகியோர் சினிமா துறையில் பெண்களுக்கு நடக்கும் அவலத்தை அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிக்கும் போது தான் என்றால், தற்போது சமீரா ரெட்டி கர்ப்பமாக இருக்கும் போதும் இப்படி படுக்கைக்கு அழைத்ததாக கூறி சினிமாத் துறையில் மனிதம் கூட இல்லையா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.