இலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்

0
233

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வத்தளை – ஹணுபிட்டிய பகுதியில் நேற்றிரவு கடற்படையினரால் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காரை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை விடுத்த போதிலும், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, சந்தேகத்திற்கிடமாக காரை நோக்கி கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காரின் ஓட்டுநர், 34 வயதான ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பின் மற்றுமொரு புறநபர் பகுதியான கிரிபத்கொடை பகுதியிலுள்ள கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காரின் ஓட்டுநர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

கடற்படையின் உத்தரவை மீறி பயணித்தமையே இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட காரணம் என போலீஸார் தெரிவிக்கின்றர்.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை போலீஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.