‘தலைக்கேறிய போதை’…’வாட்ஸ்ஆப் வீடியோ காலில்’…இளைஞர் செய்த விபரீத செயல்!

0
165

ஆந்திர மாநிலம் சித்தூரில் நண்பர்களை ஏமாற்ற தற்கொலை செய்வது போல் வீடியோ எடுக்க முயன்றபோது துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் வசித்து வரும் சிவா என்ற இளைஞர் வாகன உதிரி பாகங்கள் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவர்,தனது நண்பருக்கு வீடியோ கால் செய்துள்ளார்.

அப்போது எதிர்முனையில் இருந்த அவரது நண்பரிடம் தான் தற்கொலை செய்ய போவதாக கூறியுள்ளார்.சிவா மது போதையில் இருந்ததால் அவரது நண்பர் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

இந்நிலையில் தனது மொபைலை மேஜை மீது வைத்து விட்டு,தனது அறையில் இருந்த கட்டிலில் ஏறி மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு கொண்டார்.

அதிகப்படியான மது போதையில் இருந்ததால் தான் என்ன செய்கிறேன் என்பது கூட தெரியாமல் இருந்த அவர்,கழுத்தில் சேலை இறுகியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே வீடியோ காலில் இருந்த அவரது நண்பர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து,பக்கத்து அறையில் இருந்த அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க அலறியடித்து கொண்டு சிவாவின் அறைக்கு சென்ற அவர்கள்,சிவாவை காப்பாற்ற முயற்சித்தும் அது நடக்காமல் போனது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.மது போதையில் விளையாட்டிற்காக செய்தது இறுதியில் அவரது உயிரையே பறித்து விட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.