துக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய குரங்கு! -வீடியோ

0
564

கர்நாடகாவின் நர்குந்த் நகரில், 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தனையடுத்து அங்கு பெண்கள் உட்பட அனைவரும் அழுது கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென வந்த ஒரு குரங்கு, அழுது கொண்டிருந்த பெண் ஒருவரை மனிதர்களை போலவே அரவணைத்து ஆறுதல் கூறிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. மேலும் அவரது கண்ணீரையும் தனது கையால் துடைத்து நெகிழ வைத்தது.

இது குறித்து அந்த ஊர் மக்களிடம் கூறும்போது, இந்த குரங்கு எல்லா துக்க வீடுகளுக்குச் சென்று ஆறுதல் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளது என கூறினர். இதனால் அக்குரங்கு தங்களில் ஒருவராகவே மாறிவிட்டதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

துக்க வீட்டில் குரங்கு ஆறுதல் சொல்லும் வீடியோவை பார்த்த பலரும் அதன் மனிதாபிமானத்தை வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.”

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.