‘பெண்ணின் நகத்தில் இருந்த ரத்தம்’..‘இரட்டை கொலையில் பிடிப்பட்ட புதுமாப்பிள்ளை’.. வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!

0
113

பெண்ணின் நகத்தில் இருந்த ரத்தம்’..‘இரட்டை கொலையில் பிடிப்பட்ட புதுமாப்பிள்ளை’.. வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!

வீட்டில் தனியாக இருந்த போலிஸ் அதிகாரியின் மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருத்தணி அருகே உள்ள பெருமாள் தாங்கல் புதூர் பாலாஜி நகரில் காவலாளி வனப்பெருமாள் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 8 -ம் தேதி அவரின் மனைவி விஜயலட்சுமி(40), மற்றும் மகன் போத்திராஜ்(10) ஆகிய இருவரும் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளனர்.

இதுகுறித்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதலில் வீட்டின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான டயர் கம்பெனியில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்கள் பணத்திற்காக கொலை செய்தனரா என்ற கோணத்தில் விசாராணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது உயிரழந்த விஜயலட்சுமியின் கை விரலில் உள்ள நக இடுக்குகளில் ரத்தம் இருந்ததை பார்த்த போலிஸார் உடனடியாக அதனை ஆய்வு செய்து பார்த்துள்ளனர்.

மேலும் காவலளிரின் வீட்டின் அருகே வசிக்கும் வெங்கட் என்பவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் வரவே, அவரையும் விசாரணை செய்துள்ளனர்.

இதற்கிடையே வெளியான ரத்த பரிசோதனையில் விஜயலட்சுமியின் நக இடுக்கில் இருந்த ரத்தமும், வெங்கட்டின் ரத்தமும் ஒன்றாக இருந்ததை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை அடுத்து வெங்கட்டை விசாரித்ததில், அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், திருமண செலவுக்காக காவலரின் வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த போது, அதை காவலாளியின் மனைவி, மற்றும் மகன் தடுக்க முயற்சித்ததால் அவர்களை வெங்கட் கொலை செய்திருப்பதாக போலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.