நள்ளிரவில் கத்திமுனையில் அச்சுறுத்தி துணிகரக்கொள்ளை

0
57

வீடு உடைத்து உள் நுளைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 17 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (13.04.2019) அதிகாலை ஒரு மணியளவில் யாழ்ப்பாணம், புலோலி தெற்கு,  புற்றளைப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டின் கதவை உடைத்து உள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டாரை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர்களிடமிருந்த 17 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிசில் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.