ஜானதிபதி ஆக ஆசைப்பட்டு வலையில் சிக்கினாரா கோத்தபாய.

0
75

ஒவொரு மனிதருக்கும் வாழ்வில் எழுவத்துக்கும், வீழ்வதுக்கும் தருணங்கள் இருக்கும்.

10 வருடங்களுக்கு முன்னர், இலங்கையின் மிகவும் சக்தி மிக்க நபராக கருத்தப்படட, தற்போது 69 வயதான கோத்தாபய ராஜபக்சேவுக்கும் இந்த வீழ்ச்சியை உண்டாக்கும் தருணம் வந்து விட்டதா என்றே கடந்த வார, கொழும்பு லண்டன், கலிபோர்னியா வரை நிகழ்ந்த நிகழ்வுகள் கூறுகின்றன.

இலங்கை அரச பணத்தில் கையாடல் செய்து, தனது தந்தைக்கு நினைவு மண்டபம் கட்டினார் என்ற வழக்கில், கொழும்பு நீதித்துறையை, தனது பெரும், நியாயமில்லாத இனகுரோத வாதங்களை மூலதனமாக வைத்து வாதாடும், வக்கீல் ரொமேஷ் டீ சில்வா மூலம், தலை சுத்த வைத்து, கைதாகாமல் வெளியே இருந்தவாறே வழக்கினை சந்தித்து வருகிறார் கோத்தபாய. இந்த நீதிமன்றின் அனுமதியுடன் இரு வார காலம் கலிபோர்னியா சென்றிருந்தார் அவர்.

போட்டி போடுறோம், வெல்லுறோம்…. ஜனாதிபதி மாளிகையை பிடிக்கிறோம் என்று, விமல் வீரவன்ச, கமன் பிள்ள போன்ற ஒட்டுன்னிகள் கொடுத்த நம்பிக்கையில், இலங்கையின் ஜனாதிபதி ஆகியே விட்ட கனவில், மார்ச் மாதம் 6ம் திகதி கொழும்பில் உள்ள அமேரிக்க தூதராலயத்தில், டிரம்ப் மீதுள்ள விசுவாசத்தினை விலக்கிக் கொள்ள விண்ணப்பித்து இருந்தார் அவர்.

இதன் மூலம் இப்போது பெரும் சிக்கலில் மாட்டி உள்ளார் போலவே தெரிகிறது.

கடந்த வாரம் ஒருநாள், கலிபோர்னியாவில், மகிந்த காலத்தில் கன்சுலேட் ஜெனெரலாக இருந்த அல்லக்கை ஒன்று, ”எதிர்கால ஜனாதிபதியுடனான சந்திப்பு’ என்ற ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்து இருந்தது. ஜனாதிபதியாக கோத்தா வந்தால், தான் அமேரிக்க தூதுவர் ஆக முடியும் என அந்த அல்லக்கை நினைத்திருக்கும்.

போகும் வழியில் இருந்த சூப்பர்மார்கெட் ஒன்றில், பழங்கள் வாங்க விரும்பிய அவர், அங்குள்ள கார் தரிப்பிடத்தில்,கரை நிறுத்தி, இறங்கிய போது, அவரை நெருங்கிய குரியர் நிறுவன பெண், நீங்கள் தானே ராஜபக்சே என்று கேட்டு இரண்டு நீதிமன்ற அழைப்பாணையை, சிறிது குழம்பிய நிலையில் இருந்த ‘இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி கையில் கொடுத்தார். அவரது சக ஊழியர், இதனை படமெடுத்துக் கொண்டார்.

அப்படி ஒரு அழைப்பானையும் கொடுக்கப்படவில்லை, சும்மா பொய் கதை என்று, அவரது பெறாமகன் நாமல் முதலில் ட்வீட் அனுப்பினார்.

படம் வெளியே வந்ததும், பம்மி விட்டார்.

imageproxy.php

வழக்கில் ஒன்று, லசந்தா கொலை சம்பந்தமானது. அடுத்தது சித்திரவதை சம்பந்தமானது. முதலாவது லசந்தா மகள் தொடுத்தது. இரண்டாவது கனேடிய பிரஜையான ராய் சமாதானம் தொடுத்தது.

இந்த இரண்டாவது வழக்கு, திரைமறைவில், மிக துல்லியமாக திட்டமிட்ட ஒன்றாக திகழ்கிறது. இந்த வழக்கு விபரத்துடன் ராய் சமாதானம் கடந்த வரம் லண்டனில் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றினை நடாத்தினார்.

இவருக்காக வழக்கினை நடத்துபவர் ஸ்காட் கில்மோர் என்னும், அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் நகரில் இருந்து செயல் படும் உலகின் முதல் தர மனித உரிமை வழக்கறிஞர்.

imageproxy.php

Scott Gilmore

இவர், இலங்கையில் ஒரு கண்ணை இழந்த, லண்டன் டைம்ஸ் நிருபர் மேரி ஸ்காட் சார்பில் ஆஜராகி, அவர் கொல்லப் பட காரணமாக இருந்த சிரிய அரசுக்கு எதிராக $300மில்லியன் நஷ்ட ஈடு தீர்ப்பினை வாங்கிக் கொடுத்தவர்.

imageproxy.php

Mary Colvin

திருமணம் செய்யவென இலங்கை சென்ற, சமாதானம், புலிகளுடன் தொடர்பானவர் என பாதுகாப்பு செயலர் கோத்தாவின் உத்தரவில், கைதாகி 3 ஆண்டுகள் தடுப்புக் காவலில் இருந்தார். சித்திரவதைக்கு உள்ளானார்.

இறுதியில் வழக்குகள் இன்றி விடுதலையானார்.

இந்த வழக்குகளில் கோத்தா விசாரணைக்கு வந்தே ஆகவேண்டும். பணத்தினை கொடுத்து சமாதானமாக போக கூடிய நிலையில் வழக்காளிகள் இல்லை. ஏனெனில், அவர்கள் நன்கு திட்டமிட்டு தயாராகி உள்ளனர். இந்த வழக்கில் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமாயின், கோத்தாவின் உலக அளவிலான சொத்துக்கள், அவர் மகனுக்கு கொடுத்த, பணம், சொத்துக்கள் எல்லாம், அமெரிக்க அரசினால் கணக்கிடப்படும்.

முக்கியமாக, இலங்கையில் இன்னும் 7 மாதத்தில் ஜனாதிபதி தேர்தல். எனினும், 6 மாதத்தில், தேர்தல் ஆணையாளரிடம் நியமன பத்திரம் சமர்ப்பிக்க
வேண்டும்.

6 மாதத்துக்கு இடையே இந்த வழக்குகள் முடிந்தால் தான், ஜனாதிபதி தேர்தலில் பங்கு கொள்ள முடியும்.

அது சாத்தியமில்லை போலவே தெரிகிறது.

இதனிடையே, இலங்கையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக பொன்சேகாவை நியமிக்க ரணில் அரசு விரும்புகிறது. அது நடந்தால், கோத்தா இலங்கை குடியுரிமையையும் இழக்க கூடும்.

imageproxy.php

அமெரிக்காவில் இருந்து திரும்பிய கோத்தா, கொழும்பு விமான நிலையத்தில்

ஓய்வு எடுக்க வேண்டிய காலத்தில், ஜனாதிபதியாக வேண்டும் என கனவு கண்டு, வழக்கு சிக்கலில் மாட்டி உள்ளார் கோத்தா.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.