ஐஸ்வர்யா ராயின் ஹாலிவுட் ஆசை

0
74

தமிழ், இந்தி என கைவசம் படங்கள் இருப்பினும், ஐஸ்வர்யா ராய் தற்போது ஹாலிவுட்டில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எந்திரன் படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வரஉள்ளார்.

பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் உள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோருடன் ஐஸ்வர்யா ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தி, தமிழ் என கைவசம் படங்கள் இருப்பினும் ஐஸ்வர்யா ராயின் கவனம் ஹாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.

201904121614281102_1_Aishwarya-Rai-Hollywood2._L_styvpfஇது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட்டில் நடிக்கும் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளனர்.

ஐஸ்வர்யா ஹாலிவுட் படங்களுக்காக ஒரு குழுவை அமைத்திருப்பதாகவும் அவர்கள் அங்கு ஐஸ்வர்யாவுக்கான வாய்ப்புகளை கவனித்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, நிவேதா பெத்துராஜுக்கு பிறகு ஹாலிவுட் செல்லும் நடிகையாக ஐஸ்வர்யா இருப்பார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.