‘மீனாட்சியே நேர்ல வந்துட்டா!’ – வைரலான மதுரை சிறுமியின் போட்டோ

0
182

“பாப்பாவுக்குச் சுற்றிப்போடுங்க…”, “அப்படியே நம் மதுரையின் தெய்வம் மீனாட்சி அம்மனைப் போலவே இருக்கும் குட்டித் தேவதை”

ட்விட்டரில், மீனாட்சி அம்மன் வேடம் அணிந்திருக்கும் சிறுமியின் குழந்தையின் புகைப்படத்துக்கு இப்படியான ஏராளமான கமென்டுகள் வந்தபடியே இருக்கின்றன. பார்த்தவுடனே செல்லம் கொஞ்சத் தூண்டும் அந்தக் குழந்தை யார் என்ற தேடலில் கிடைத்த அந்தக் குழந்தையின் தந்தை கேசவனிடம் பேசினோம்.

“நாங்க மதுரை முனிச்சாலையில இருக்கேன். ஒரு ஜீவல்லரி ஷாப்ல வேலை. மனைவி வீட்டைக் கவனிச்சிக்கிறாங்க. எங்களுக்கு இரண்டு பொண்ணு. இப்போ நீங்க போட்டோவுல பார்த்தது மூத்த பொண்ணு ஸ்ரீநிதி. யு.கே.ஜி-யிலிருந்து ஒண்ணாம் வகுப்புக்குப் போகப்போறா.

அவ ப்ரீகேஜி படிக்கும்போது ஆண்டு விழாவில் மீனாட்சி அம்மன் வேஷம் போட வெச்சோம். அவ முகத்துக்கு ரொம்ப பொருத்தமாக இருக்குனு டீச்சருங்களும் அங்கே வந்தவங்களும் சொன்னாங்க. அதனால, மதுரை மீனாட்சி அம்மன் வேஷம் போட்டு, சித்திரை திருவிழாவுக்கு வருவோம்.

madurai_chi_14480என் ஃப்ரெண்டுதான் மேக்கப் போட்டு விடுவாங்க. புடவைக் கட்டிவிட்டு, மேக்கப் போட எப்படியும் இரண்டு மணிநேரமாகிடும். அதுவரை அழாம ஒத்துழைப்பு கொடுப்பா.

வேஷம் போட்டு தெருவுல அழைச்சிட்டு வந்தாலே, ‘மதுரை மீனாட்சியைப் பார்த்த சந்தோஷம் இருக்குப்பா”ன்னு தெருக்காரங்க சொல்வாங்க. குழந்தையும் தெய்வமும் ஒண்ணும்னு சொல்றதுதானே நம் ஊரு பழக்கம்.

நிறைய பேர் வந்து அவங்களே பாப்பாவுக்கு சுத்திப் போடுவாங்க. வருஷா வருஷம் இப்படி அழைச்சிட்டு சித்திரை திருவிழாவுக்குப் போவோம். முன்னாடியெல்லாம் மூணு நாள் வேஷம் போட்டு அழைச்சிட்டு போவோம். ரொம்ப கண்ணு பட்டுடுது.

அதனால, இந்த வருஷம் ஒருநாள்தான் அழைச்சிட்டு போனோம். எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லி வாழ்த்தும்போது சந்தோஷமாக இருக்கு” என்றார்.

சுத்திப் போடுங்க சார்… பாப்பா செம அழகு. சாட்சாத் மீனாட்சியேதான்!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.