இந்த வார ராசிபலன் ஏப்ரல் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்

0
130

துலாராசிக்காரர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசிய செலவுகளாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

mesha_17454மேஷராசி அன்பர்களே!

தேவையான அளவுக்குப் பணவரவு இருந்தாலும், திடீரென ஏற்படும் செலவுகளால் சேமிக்க முடியாத நிலை ஏற்படும். சிலருக்குச் சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும், பொருட்படுத்தாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் அறிவுரை மனதுக்கு ஆறுதல் தரும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மேற்படிப்புக்குத் தேவையான உதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் மிகுந்த கவனம் தேவை.

அதிர்ஷ்ட நாள்கள்: 8, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,6
வழிபட வேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

rishaba_17519ரிஷபராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். கணவன் – மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இளைய சகோதரர்களால் உதவி உண்டு.

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணியில் ஸ்திரத் தன்மை உண்டாகும்.

வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விடுமுறையில் கம்ப்யூட்டர் போன்ற விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம்.

அதிர்ஷ்ட நாள்கள்: 9, 10, 13
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: வள்ளி தேவசேனா சமேத முருகக்கடவுள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

mithuna_17014 மிதுனராசி அன்பர்களே!

வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவு களால் கடன் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்காது.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில்

சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 8, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.

kadaga_17198 கடகராசி அன்பர்களே!

பண வரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருவதாக இருக்கும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.

மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். படிப்பதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்பட வேண்டி இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உற்சாகமான வாரம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 8, 9, 10, 13
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 2, 7
வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

simma_17419சிம்மராசி அன்பர்களே!

பண வரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகள் இருக்காது. திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட லாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும்,

அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.

வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மேற்படிப்பிற்கான முயற்சிகள் சாதகமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். மற்றவர்களுடன் இணக்க மான சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 9, 10, 11, 12
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4
வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும்
சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை,
மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்றவாறே! .

kanni_17056கன்னிராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கண வன் -மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்தாலும் உடனே நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காததுடன், கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்படும்.

மாணவர்களுக்கு மேற்படிப்பில் ஆர்வம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மேற்படிப்புக்கான வழிகாட்டுதலும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11, 12, 13
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,3,6
சந்திராஷ்டம நாள்: 8
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

dhulam_17241 துலாராசி அன்பர்களே!

வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசிய செலவுகளாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.

மாணவர்களுக்கு மேல்படிப்பு தொடர்பான முயற்சிகள் அனுகூலமாக முடியும். கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 8, 13
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,5
சந்திராஷ்டம நாள்கள்: 9, 10
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன்.

viruchi_17475 விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகளும் குறைவா கவே இருக்கும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரும்.

அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். படிப்புக்கான பண உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 8, 9, 10
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7
சந்திராஷ்டம நாள்கள்: 11, 12
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

dhanushu_17119தனுசுராசி அன்பர்களே!

பண வரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் இருந்து வந்த சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மாணவர்களுக்கு மேல்படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். விடுமுறைக் காலத்தை கம்ப்யூட்டர், அனிமேஷன் போன்றவற்றைக் கற்றுக்கொள்வதில் ஈடுபடும் வாய்ப்பு அமையும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 9, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 4,5,6
சந்திராஷ்டம நாள்கள்: 13, 14
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே

mgaram_17342மகரராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே திருப்தியாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மேல்படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடைபெறும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நாள்: 11, 12, 13
அதிர்ஷ்ட எண்கள்: 2,5,7
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம்தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

kumba_17543கும்பராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்த வர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும்.

அலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி

வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறைவதற்கான சாத்தியம் உள்ளது. சக நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 8, 13
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6,9
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண் செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கம் துயரம் இல்லையே

meenam_17192மீனராசி அன்பர்களே!

பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு பாராட்டுவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும்.

கலைத்துறையினருக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மாணவர்களுக்கு அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படக்கூடும். விரும்பியபடி உயர்கல்வி அமைவதில் சிற்சில தடைகள் ஏற்பட்டாலும், முடிவு சாதகமாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 9, 10
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மெய்யராகி பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே
நைவனாயேன் உந்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம் முன்னே வந்து நல்காய் வலிவல மேயவனே

ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.