கணிதப் புலமையால் உலகை மிரட்டும் தமிழ்ச் சிறுவன்! (Video)

0
193

Asia’s Got Talent என்ற திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ச் சிறுவன்.

சிங்கப்பூரில் நடைபெறும் இந்த போட்டி நிகழ்ச்சியில் 15 வயதேயான யாஷ்வின் சரவணனின் கணிதத் திறனின் வல்லமையே அவரை இறுதிச் சுற்று வரை கொண்டு வந்துள்ளதாக நடுவர்கள் கூறியுள்ளனர்.

கணிதத்தை சுவாரசியமான விதத்திலும் கையாள முடியும் என்பதைத் தனது தந்திர திறமையினால் மற்றவர்களை ஈர்த்திருக்கிறார் யாஷ்வின்.

இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள 9 பேர்களில் யாஷ்வினின் கணிதத் திறனும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள வேளையிலும் இன்னும் வெற்றியாளர் அறிவிக்கப்படவில்லை. மக்களின் முடிவே இறுதி தீர்ப்பு என்பதால் ஏப்ரல் 10 வரை Google Search, Facebook Messenger வாயிலாக பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான தனிநபர் அல்லது குழுவுக்கு வாக்களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.