விபத்தில் சிக்கிய இளைஞன் : சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0
184

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பருத்தித்துறை  பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள மந்திகை சிலையடிக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளிலும் ஹன்டர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் குடத்தனை கிழக்கை சேர்ந்த 21 வயது இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிரசிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரு மாதத்தின் பின் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.