எங்கே திருநாவுக்கரசின் தோழி.. அவரை பிடித்தால் மொத்தமும் சிக்கும்.. தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்

0
120

இந்த ஒரு பெண்ணை கண்டுபிடித்துவிட்டால் போதும்.. மிச்சமுள்ளவர்கள் தானாக சிக்குவார்கள் என்று திருநாவுக்கரசுவின் தோழியை தேடும் படலம் ஆரம்பமாகி உள்ளது.

400-க்கும் மேற்பட்ட பெண்களை நாசமாக்கிய திருநாவுக்கரசுக்கு ஒரு பெண் தோழி இருக்கிறார் என்றால் நம்பவே முடியவில்லை. 7 வருடமாக, 1500 ஆபாச வீடியோ எடுத்தவனுடன் ஒரு பெண்ணுக்கான நட்பு எந்த அடிப்படையில் இருந்திருக்கும், அல்லது இவனிடம் எப்படி அந்த பெண் நட்புடன் பழகி இருப்பார் என்ற பலமான, ஆச்சரியமான சந்தேகம் எழுந்துள்ளது.

 கல்லூரி நட்பு கோவையில் உள்ள பிரைவேட் காலேஜில் எம்பிஏ., படிக்கும்போதுதான் அந்த பெண்ணின் நட்புகிடைத்துள்ளது. அவரும் அதே காலேஜ்தான். சேலத்தை சேர்ந்தவராம்!

 pollachi-accused3-1552366202-1552565725பெண்களிடம் பேசி மயக்க, அவர்களின் செல்போன் நம்பர் வேண்டும் என்றால் திருநாவுக்கரசு இந்த தோழியிடம்தான் கேட்பாராம். அந்த தோழியும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேசி நைசாக நம்பவரை வாங்கி வந்து திருநாவுக்கரசுவிடம் தருவாராம். அப்பறம் மற்ற வேலைகள் வேக வேகமாக ஆரம்பமாகுமாம்.

 அது மட்டும் இல்லை, போலீசிடமிருந்து தப்பிக்க திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்த சமயத்தில், இந்த தோழிதான் உதவியிருக்கிறாள். திருநாவுக்கரசு தங்குவதற்காக அடைக்கலம் தந்ததும் இந்த தோழியேதானாம்!

pollachi-accused6-1552367255-1552565920திருநாவுக்கரசு அரெஸ்ட் என்றதும் இப்போது தோழி எஸ்கேப்! எங்கே என்று தெரியாததால் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்காக அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காகவே இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சேலம் சொந்த ஊர் என்பதால், ஒருவேளை தோழி அங்கு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு போலீசார் அங்கும் விரைந்திருக்கிறார்கள். அந்த ஒரு பெண்ணை கண்டுபிடித்துவிட்டால், எத்தனையோ பெண்களை நாசம் செய்த காமுகர்களின் விவரங்கள் தெரியவரும் என போலீஸ் தரப்பில் நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.