கேரளா – காதலிக்க மறுத்த இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் கைது

0
68

கேரளாவில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ரேடியாலஜி படித்து வரும் மாணவியை (19), அதே பகுதியை சேர்ந்த அஜின் ரேஜி மேத்யூ ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியும் அவர் மறுத்து வந்துள்ளார். திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோரும் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று கல்லூரிக்கு சென்ற மாணவியை மேத்யூ வழிமறித்து நிறுத்தினார். தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி மறுபடியும் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த மாணவி மீண்டும் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மேத்யூ, தான் கொண்டு வந்த பெட்ரோலை மாணவி மீது ஊற்றி தீ வைத்தார். இதைக் கண்டதும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து மாணவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே தப்பி ஓட முயன்ற மேத்யூவை மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் மேத்யூ மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதுதொடர்பாக, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 60 சதவித தீக்காயம் அடைந்து பாதிக்கப்பட்ட பெண், மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.