ஏழு தமிழர்களையும் மன்னித்துவிட்டோம் – சென்னையில் ராகுல்காந்தி

0
87

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்கள் மீது தனக்கு எந்தவித வெறுப்பும் இல்லை என தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களை மன்னித்துவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த ராகுல்காந்தி கல்லூரி மாணவிகளின் கேள்விக்கு பதில் அளிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Murugan1991 ம் ஆண்டு எனது தந்தை இரு நோக்கங்களிற்காக கொல்லப்பட்டார் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

முதலாவது தனிப்பட்ட காரணங்களிற்காக அவர் கொல்லப்பட்டார் அதனை நாங்கள் சந்தித்து வருகின்றோம் என தெரிவித்துள்ள ராகுல்காந்தி இரண்டாவது சட்டரீதியானது சட்டரீதியான விடயங்கள் இடம்பெறுவது மகிழ்ச்சியளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்

குற்றவாளிகளை நாங்கள் முழுமையாக மன்னித்துவிட்டோம் எந்தவிதமான வெறுப்பும் குரோதமும் எவர்மீதும் இல்லை என தெரிவித்துள்ள அவர் அவர்கள் விடுதலை செய்து நீதிமன்றம் முடிவு செய்யட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.