இந்த வார ராசிபலன் (மார்ச் 11 முதல் 17 வரை)

0
270

mesha_17454மேஷராசி அன்பர்களே!

தேவைக்கேற்ப பணவரவு இருப்பதால் பிரச்னை எதுவும் இருக்காது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறான அபிப்பிராயம் கொண்டிருந்த உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள்.

அலுவலகத்தில் சற்று இறுக்கமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும் பொறுமை காப்பது நல்லது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பதுடன், பணிகளில் உதவி செய்வதும் ஆறுதல் தருவதாக இருக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் சிரத்தை எடுத்துப் படிப்பீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். ஆனால், சற்று பணிச்சுமை கூடுவதால் உடல் அசதி ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 14, 15, 16
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமைய, கந்த புராணத்தில் இடம் பெற்றிருக்கும் கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்வது நல்லது.

திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்,
சகட சக்கரத் தாமரை நாயகன்,
அகட சக்கர இன்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

 rishaba_17519ரிஷபராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். மற்றவர்களுடன் பேசும்போது மட்டும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்ற விரும்பினால், அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் தடை எதுவும் இருக்காது. வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும்.
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சிரத்தை எடுத்துப் படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 15, 16
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

பரிகாரம்: வாகனத்தில் செல்லும்போது இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, அபிராமி அந்தாதியில் உள்ள கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்வது நல்லது.

அன்றே தடுத்தென்னை ஆண்டு கொண்டாய்! கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செய்யினும், நடுக்கடலுள்
சென்றே வீழினும், கரை ஏற்றுகை நின் திருவுளமே!
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே!

 mithuna_17014மிதுனராசி அன்பர்களே!

வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. பணியின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் சந்தர்ப்பம் கனிந்து வரும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை இழக்காமல் இருப்பது நல்லது.

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் குறையக்கூடும். மனதை அலைபாயவிடாமல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 11, 15, 16
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 8

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
பரிகாரம்: மற்றவர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்பட அபிராமி அந்தாதியில் உள்ள கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்வது நல்லது.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

kadaga_17198கடகராசி அன்பர்களே!

பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். வாகனத்தில் பழுது ஏற்பட்டு நீங்கும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சிலருக்கு இருக்கும் இடத்திலிருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு கடின முயற்சியின் பேரில் வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மாணவர்கள் தேர்வுகளுக்காக சிரத்தையுடன் படிப்பீர்கள். அவ்வப்போது சற்று ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. பெற்றோர் அனுசரணையாக இருப்பார்கள்.

குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் கூடும் என்பதால் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 11, 12, 13, 17
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6

வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: உடல் ஆரோக்கியம் மேம்பட கந்த சஷ்டி கவசத்திலுள்ள கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யவும்.

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் – நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்த
சஷ்டி கவசந்தனை
அமரர் இட தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி

simma_17419சிம்மராசி அன்பர்களே!

பணவரவுக்கு குறைவிருக்காது. ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக் கிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற்றுத் தருவதுடன், அதன் மூலம் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளும் கிடைக்கப் பெறலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள். சக வியாபாரிகளுடன் சுமுகமான உறவு ஏற்படும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் வரும் என்று சொல்வதற்கில்லை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது முக்கியம். மூத்த கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக் குறைவும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 12, 13, 14, 17
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க, சீர்காழித் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய

பதிகத்திலுள்ள கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

kanni_17056 கன்னிராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். சிலருக்கு இளைய சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கக்கூடும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பது உற்சாகமும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்கவும் வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். சக கலைஞர்களால் உதவி உண்டு.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சிரத்தையுடன் படிப்பதுடன், சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
சந்திராஷ்டம நாள்: 11

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: இளைய சகோதரர்களுடன் ஒற்றுமை வலுப்படவும், அவர்களால் ஆதாயம் ஏற்படவும் திருஞானசம்பந்தர் அருளிய பொதுப்

பதிகத்திலுள்ள கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திரு நீலகண்டம்

dhulam_17241 துலாராசி அன்பர்களே!

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவினர்களால் உதவியும் உண்டு; உபத்திரவமும் உண்டு.

புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.கிருஷ்ண துளசி

வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.

கலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்: 17
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சந்திராஷ்டம நாள்கள்: 12, 13, 14

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
பரிகாரம்: கலைத்துறையினருக்கு அவர்கள் எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கவும், பணவரவு அதிகரிக்கும் அபிராமி

அந்தாதியிலுள்ள கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்தும் தமனியக் காவினில் தங்குவரே

viruchi_17475 விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தருவார். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல இடத்தில் வரன் நிச்சயமாகும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறும் சூழ்நிலை ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 11
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7
சந்திராஷ்டம நாள்கள்: 15, 16

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: திருமணத் தடை நீங்கி, நல்ல இடத்தில் வரன் அமைய திருக்கழிப்பாலை திருத்தலத்தில் திருநாவுக்கரசர் பெருமான் அருளிய

பதிகத்திலுள்ள கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.
நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே

dhanushu_17119தனுசுராசி அன்பர்களே!

வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பேச்சினால் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். செலவுகள் அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவர்கள் அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்ட நாள்கள்:13, 14, 15, 16
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
சந்திராஷ்டம நாள்: 17

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படாமல் இருக்க, அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியிலுள்ள கீழ்க்காணும்

பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

mgaram_17342மகரராசி அன்பர்களே!

இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக் கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.
கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களால் உதவி கிடைக்கும்.

மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான பாடங்களையும் எளிதாகப் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும். வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.

அதிர்ஷ்ட நாள்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: காளிகாம்பாள்
பரிகாரம்: கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகளால் மன அமைதி பாதிக்காமல் இருக்க, அபிராமி அந்தாதியிலுள்ள

கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்..
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே

 kumba_17543கும்பராசி அன்பர்களே!

வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடையே மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம். நிர்வாகத்தினரிடம் நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேறுவது மகிழ்ச்சி தரும்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த நிறுவனங்களில் இருந்து வாய்ப்பு வரும். வருமானமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. மனதை அலைபாய விடாமல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்கள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: 11, 12, 17
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: அகிலாண்டேஸ்வரி அம்பிகை
பரிகாரம்: மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கவும், நினைவாற்றல் பெருகவும் குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி

மாலையிலுள்ள கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்வது நல்லது.
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்தநல் காய்எழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும்அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே

meenam_17192மீனராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் இழுபறியான நிலையே காணப்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.

கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை. குழப்பமான

நேரங்களில் ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 12, 13, 14, 17
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்:7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: பழைய கடன்கள் தீரவும், கடன்களால் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கவும் திருஞானசம்பந்தர் திருவாவடுத்துறை தலத்தில்

அருளிய பதிகத்திலுள்ள கீழ்க்காணும் பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.
இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே

ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.