‘தாதாக்கு இருப்பதோ 600 கோடிக்கு சொத்து’…ஆனால்…பட்டப்பகலில் நிகழ்ந்த சோகம்!

0
205

600 கோடிக்கு அதிபதியான தாதா பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”,இவர் பெயரை தெரியாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு இவர் பெங்களுரில் உள்ள பிரபல தாதா.

இவர் சகோதரர் ராமா என்பவருடன் சேர்ந்துகொண்டு பெங்களூரு நகரையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இவர்களுடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.இன்னும் சொல்லப்போனால்,பெங்களூரு நகரின் பணக்கார தாதா இவர் தான்.

லக்ஷ்மணா மற்றும் அவரின் சகோதரர் ராமா மீது மீது நில மோசடி, கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

இவர்களுக்கு எதிராக அவ்வளவு எளிதில் யாரும் உருவாகிவிட முடியாது.கடந்த 2005- ம் ஆண்டு பெங்களூரில் மற்றொரு தாதாவான மாச்சா மஞ்சாவை லக்ஷ்மணா, ராமர் மற்றும் 40 பேர் சேர்ந்து வெட்டிக் கொன்றனர்.

மாச்சா மஞ்சா தன் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து வெட்டிக் கொன்ற சம்பவம் பெங்களூரு நகரையே புரட்டி போட்டது.

காவல்துறையினரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் அரசியல் பின்புலன் காரணமாக ஜாமினில் வெளியே வந்துவிடுவார்கள்.

இந்நிலையில் நேற்று தன் இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தபோது, மகாலக்ஷ்மி லேஅவுட் பகுதியில் உள்ள இஸ்கான் கோயில் அருகே 5 பேர் கொண்ட கும்பல் இவரின் காரை வழிமறித்துள்ளது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் தனது காரை வேகமாக ஓட்டியுள்ளார்.இருப்பினும் விடாமல் துரத்திய கும்பல்,மைசூர் சான்டல் சோப் நிறுவனத்தின் அருகே லக்ஷ்மணாவின் காரை மறித்தது. உள்ளே இருந்த லக்ஷ்மணாவை வெளியே இழுத்து போட்டு சரமாரியாக வெட்டி கொன்றது.

மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தியை எடுத்தவனுக்கு கதியாலேயே மரணம் என்பதை போன்று,600 கோடிக்கு சொத்து இருந்தும் லக்ஷ்மணாவின் எதிரிகளாலேயே அவருக்கு மரணம் வந்திருப்பதாக அங்கிருந்த பொதுமக்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.