தமிழர்களுக்கு பேரிடி கொடுத்த பிரித்தானியா!

0
303

தீர்­மான வரைவானது, பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமி­ழர்­க­ளுக்கு அதிர்ச்­சியை

ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஏனென்றால், இலங்கை அர­சாங்­கத்­துக்கு மேலும் இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­கா­சத்தைக் கொடுக்கும் வகையில் இது தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது

கடந்த ஆண்டைப் போலவே பெரியளவில் அழுத்தங்களைக் கொடுக்காத ஒரு தீர்மான வரைவாக இது இருந்தாலும், இதற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கும் சாத்தியங்கள் இல்லை என்றே தெரிகிறது.

அதற்கு முன்னோடியாகவே, இங்கிருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழுவை அனுப்புவதில்லை என்று வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருக்கிறது. ஜெனீவாவில் உள்ள பிரதிநிதியும், செயலர்களுமே இந்த தீர்மானத்தை கையாளப் போகிறார்கள்

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 40 ஆவது கூட்­டத்­தொடர் நடந்து கொண்­டி­ருக்கும் நிலையில், இலங்கை தொடர்­பாக பேர­வையில் கொண்டு வர­வுள்ள தீர்­மா­னத்தின் முதல்­நிலை வரைவை பிரித்­தா­னியா அதி­கா­ர­பூர்­வ­மற்ற வகையில் வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

பிரித்­தா­னியா, கனடா, ஜேர்­மனி, மசி­டோ­னியா, மொன்­ர­னிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து கொண்­டு­வ­ர­வுள்ள தீர்­மா­னத்தின், முன்­வ­ரைவு கடந்த வியா­ழக்­கி­ழமை பேர­வையின் உறுப்பு நாடு­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

நாளை மறுநாள் – மார்ச் 05ஆம் திகதி ஜெனீ­வாவில் உள்ள பிரித்­தா­னிய வதி­விடப் பிர­தி­நி­தி­யினால், பக்க அமர்வு ஒன்­றுக்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. இதில் இலங்கை தொடர்­பாக கொண்டு வரப்­படும் தீர்­மான வரைவு குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதற்குப் பின்னர் மேலும் இரண்டு பக்க அமர்­வு­களை பிரித்­தா­னியா நடத்தத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

2012ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கை தொடர்­பான தீர்­மா­னங்­களை முன்­னின்று நிறை­வேற்றி வந்த அமெ­ரிக்கா இப்­போது பேர­வையில் உறுப்பு நாடாக இல்­லாத நிலையில், பிரித்­தா­னியா அந்த தலைமைப் பொறுப்பை ஏற்­றி­ருக்­கி­றது. அதற்கு அமை­வா­கவே, புதிய தீர்­மான வரை­வையும் உறுப்பு நாடுகள் மத்­தியில் உலாவ விட்­டி­ருக்­கி­றது.

இந்த தீர்­மான வரைவு, பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமி­ழர்­க­ளுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஏனென்றால், இலங்கை அர­சாங்­கத்­துக்கு மேலும் இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­கா­சத்தைக் கொடுக்கும் வகையில் இது தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

“இலங்­கையில் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரி­மை­களை ஊக்­கு­வித்தல்” என்ற தலைப்பில், 2017ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட 34/1 தீர்­மா­னத்­துக்கும், இப்­போதும் அதே தலைப்பின் கீழ் கொண்டு வரப்­ப­டு­வ­தற்­காக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள வரை­வுக்கும் இடையில் பெரி­தாக எந்த வித்­தி­யா­சமும் கிடை­யாது.

புதிய வரைவில், இலங்கை அர­சாங்கம் ஜெனீவா தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு எடுத்­துள்ள முயற்­சி­க­ளுக்கு பாராட்டுத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காணாமல் போனோர் பணி­யகம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளதை வர­வேற்கும் இந்த வரைவு, அதற்கு வழங்­கப்­பட்ட ஆணைக்கு அமைய முழு­மை­யாகச் செயற்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கி­றது,

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் சிறப்பு அறிக்­கை­யா­ளர்­களின் ஆய்வுப் பய­ணங்­க­ளுக்கு ஒத்­து­ழைத்த அர­சாங்­கத்தின் செய­லுக்கு வழக்­கம்­போ­லவே வர­வேற்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உள்ளூர் மக்கள் மீண்டும் தமது வாழ்­வா­தா­ரத்தைத் தொடங்­கு­வ­தற்கு, இரா­ணு­வத்­தி­னரின் பிடியில் உள்ள தனியார் காணி­களை விடு­விக்க அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யுள்ள அதே­வேளை, ஏற்­க­னவே தனியார் காணிகள் இரா­ணு­வத்தின் பிடியில் இருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தற்கும் பாராட்டுத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

30/1 தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில், இழப்­பீ­டு­க­ளுக்­கான பணி­யகம், உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­குழு போன்­ற­வற்றை உரு­வாக்­கவும், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை ஒழித்து, பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தைக் கொண்டு வரு­வ­தற்கும் எடுக்­கப்­பட்­டுள்ள முயற்­சி­க­ளுக்கும் இந்த வரைவில் வர­வேற்புத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், இந்த விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கால­வ­ரம்­புடன் கூடிய மூலோ­பாயம் ஒன்று வகுக்­கப்­பட வேண்டும் என்­பதும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்­னைய தீர்­மா­னங்­களில் இருந்து ஒரு விடயம் வேறு­ப­டு­கி­றது. 2018 ஒக்­டோபர் தொடக்கம் டிசம்பர் வரை­யான காலப்­ப­கு­தியில் எழுந்த அர­சியல் சூழ்­நி­லை­களின் போது, அமை­தி­யான முறையில் தீர்வு காண்­பதில் வலு­வான பங்­க­ளிப்புச் செய்த இலங்­கையின் ஜன­நா­யக நிறு­வ­னங்­களை அங்­கீ­க­ரிக்­கி­றது என்று இந்த வரைவில் புதி­ய ­தொரு பந்தி சேர்த்துக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது,

இலங்கை அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பாராட்­டு­க­ளையும், அது எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­க­ளுக்கு வர­வேற்­பையும் தெரி­வித்­துள்ள இந்த வரைவில், நிறை­வேற்ற வேண்­டிய கடப்­பா­டுகள் குறித்து புதி­தாக எந்தக் கருத்தும் வலி­யு­றுத்­தப்­ப­ட­வில்லை.

* 30/1 தீர்­மா­னத்தில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யினால், அடை­யாளம் காணப்­பட்ட நட­வ­டிக்­கை­களை முழு­மை­யாக நிறை­வேற்ற இலங்கை அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கப்­ப­டு­கி­றது.

* 2015ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் மற்றும் ஆணை­யாளர் பணி­யகம், சம்­பந்­தப்­பட்ட சிறப்பு ஆணை பெற்­ற­வர்­க­ளுடன் இலங்கை அர­சாங்கம் கொண்­டுள்ள சாத­க­மான ஈடு­பாட்டை வர­வேற்­ப­துடன், அந்த மனித உரி­மை­களை பாது­காக்­கவும் ஊக்­கு­விக்­கவும், உண்மை, நீதி, நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கா­கவும், அந்த ஈடு­பாடு தொட­ரப்­ப­டு­வதை ஊக்­கு­விக்­கி­றது.

* இலங்கை அர­சாங்­கத்­துடன் கலந்­து­ரை­யாடி, அதன் இணக்­கப்­பாட்­டுடன், இலங்­கையில் மனித உரி­மை­களை ஊக்­கு­வித்தல் மற்றும் பாது­காத்தல், நீதி, உண்மை, நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான தமது ஆலோ­ச­னை­க­ளையும், தொழில்­நுட்ப உத­வி­க­ளையும், தொடர்ந்து வழங்க வேண்டும், என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும், சிறப்பு ஆணை பெற்­ற­வர்­களும் கேட்டுக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர்.

* இலங்­கையில் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரி­மைகள் தொடர்­பான பரிந்­து­ரைகள் மற்றும் பிற தொடர்­பு­டைய செயல்­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் முன்­னேற்­றத்தை மதிப்­பீடு செய்து, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 40 ஆவது கூட்­டத்­தொ­டரில் எழுத்து மூல­மான அறிக்கை ஒன்றைச் சமர்ப்­பிக்­கு­மாறும், 30/1 தீர்­மா­னத்தின் நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்­பாக பேர­வையின் 46 ஆவது கூட்­டத்­தொ­டரில், விவாதம் நடத்­து­வ­தற்­காக விரி­வான அறிக்கை ஒன்றைச் சமர்ப்­பிக்­கு­மாறும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரிடம் கேட்டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

இவை தான், தீர்­மான வரைவில் கூறப்­பட்­டுள்ள விட­யங்கள்.

இதன்­படி, 30/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ள போதும், அதற்­கான அழுத்­தங்கள் ஏதும் இலங்­கைக்கு கொடுக்­கப்­ப­ட­வில்லை.

அது­போன்றே, உண்மை, நீதி, நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­வது தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரையும், சிறப்பு அறிக்­கை­யா­ளர்­க­ளையும். ஆலோ­ச­னை­க­ளையும் தொழில்­நுட்ப உத­வி­க­ளையும் அளிக்­கு­மாறு கோரப்­பட்­டுள்ள போதும், அதனை இலங்கை அர­சாங்­கத்­துடன் கலந்­து­ரை­யாடி, அதன் இணக்­கப்­பாட்­டுடன் தான் செய்­யப்­பட வேண்டும் என்றும் கூறப்­பட்­டுள்­ளது.

இதுவும் முன்­னைய தீர்­மா­னங்­களின் வடிவம் தான்.

இவை தவிர, அடுத்த ஆண்டு மார்ச் மாதம், 43 ஆவது கூட்­டத்­தொ­டரில் முன்­னேற்­றங்கள் தொடர்­பான அறிக்­கையை சமர்ப்­பிக்­கவும், 2021 மார்ச் மாதம், 46 ஆவது கூட்­டத்­தொ­டரில் 30/1 தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்­பான விரி­வான அறிக்கை சமர்ப்­பித்து விவாதம் நடத்­தப்­பட வேண்டும் என்றும் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

இதன்­படி, 30/1 தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்­கத்­துக்கு, மேலும் இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் கொடுக்­கப்­பட­வுள்­ளது.

இது மேல­திக கால­அ­வ­கா­சமே தவிர, காலக்­கெடு அல்ல என்­பது கவ­னிக்­கத்­தக்­கது. அதா­வது, குறிப்­பிட்ட காலத்­துக்குள் இதனை நிறை­வேற்ற வேண்டும் என்று எந்த இடத்­திலும் கூறப்­ப­ட­வில்லை. அவ்­வாறு குறிப்­பிட்டால் அது காலக்­கெடு.

ஆனால், இது- 2021 மார்ச் வரை 30/1 தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கால­அ­வ­காசம் அளிக்கும் வகையில் அமைந்­தி­ருக்­கி­றது.

2015ஆம் ஆண்டு 30/1 தீர்­மானம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. – இதனை நிறை­வேற்ற 2021வரை- அதா­வது 6 ஆண்­டுகள் கால­அ­வ­காசம் அளிப்­ப­தென்­பது, மிகை­யா­ன­தொன்று. அதை­யிட்டு மேற்­கு­லகம் கவலை கொள்­ள­வில்லை.

ஏற்­க­னவே பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்து விட்­டார்கள். இனி­மேலும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு கால­அ­வ­கா­சத்தை அளிக்கக் கூடாது என்று வலி­யு­றுத்தி போராட்­டங்­களை நடத்தி வரு­கி­றார்கள்.

ஆனால், பிரித்­தா­னி­யாவோ, இலங்கை அர­சாங்­கத்­துக்கு மேல­திக கால­அ­வ­கா­சத்தை அளிப்­பதில் உறு­தி­யாக இருக்­கி­றது என்­பதை இந்த வரைவு வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஜெனீவா தீர்­மான விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துடன் முட்டிக் கொள்­வ­தற்கு இப்­போ­தைய நிலையில் மேற்­கு­லகம் விரும்­ப­வில்லை. மேற்­கு­லகின் நலன்­களைப் பாது­காக்க அது முக்­கி­ய­மா­னது, சீன சார்பு நிலையில் இருந்து, இலங்­கையை வெளியே கொண்டு வந்து விட்­ட­போதும், சீன சார்பு மஹிந்த ராஜபக் ஷவின் மீள் எழுச்சி மேற்­கு­ல­கிற்கு ஒரு சவா­லாக இருக்­கி­றது.

அதனைத் தடுக்க வேண்­டு­மாயின் ஜெனீ­வாவில் மென்­மை­யான முகத்தைக் காண்­பிக்க வேண்டும். இந்த தீர்­மான வரைவில் கூட, அர­சியல் குழப்­பத்தில் ஜன­நா­யக நிறு­வ­னங்­களின் செயற்­பாடு வர­வேற்­கப்­பட்­டி­ருப்­பது முக்­கி­யமாக குறிப்­பி­டத்­தக்க ஒன்று.

அதை­விட, – கடு­மை­யான – இலங்­கைக்கு அழுத்­தங்­களைக் கொடுக்கக் கூடிய- – காலக்­கெ­டுவை விதிக்கக் கூடிய தீர்­மானம் ஒன்றைக் கொண்டு வந்து நிறை­வேற்­று­வது பிரித்­தா­னியா உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு பிரச்­சி­னை­யான விட­ய­மா­கவும் இருக்­கி­றது என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

அமெ­ரிக்கா அள­வுக்கு பிரித்­தா­னியா உள்­ளிட்ட நாடு­களால் இந்த விட­யத்தில் செயற்­பட முடி­யாது என்­பது ஒன்று.

வலி­மை­யான தீர்­மானம் ஒன்­றுக்கு உறுப்பு நாடு­களின் ஆத­ரவைப் பெற முடி­யாது என்­பது மற்­றொன்று. ஏனென்றால், சர்­வ­தேச உற­வு­களை இலங்கை வலுப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

இந்த இரண்டு கார­ணி­க­ளாலும், பிரித்­தா­னியா உள்­ளிட்ட நாடு­களால் வலு­வான- அழுத்தம் கொடுக்கக் கூடிய தீர்­மான வரைவை முன்­வைக்க முடி­யாமல் உள்­ளது.

அதே­வேளை, கடந்த ஆண்டைப் போலவே பெரியளவில் அழுத்தங்களைக் கொடுக்காத ஒரு தீர்மான வரைவாக இது இருந்தாலும், இதற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கும் சாத்தியங்கள் இல்லை என்றே தெரிகிறது. அதற்கு முன்னோடியாகவே, இங்கிருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழுவை அனுப்புவதில்லை என்று வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருக்கிறது. ஜெனீவாவில் உள்ள பிரதிநிதியும், செயலர்களுமே இந்த தீர்மானத்தை கையாளப் போகிறார்கள்.

இலங்கை அரசாங்கம் இதற்கு இணங்காது போனாலும், எதிர்க்காது என்றே தெரிகிறது. ஏனென்றால், இது ஏற்கனவே இணங்கிய தீர்மானத்தின் இன்னொரு நகல் வடிவம் தான்.

அந்த வகையில் இந்த தீர்மான வரையில் திருத்தங்கள் செய்யப்படாது போனால், அதனை நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா அவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது.

ஆனால், ஒன்று, இதனை நிறைவேற்றுவது பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு இலகுவானதாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவர்களால் இனி நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது இலகுவானதாக இருக்காது.

ஏனென்றால், ஏற்கனவே நம்பிக்கையிழந்து போயிருப்பவர்களுக்கு இந்த தீர்மான வரைவு ஒரு இடியாக இறங்கியிருக்கிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.