ஒலி மாசால் அதிகரித்துவரும் காதுகேளாமை

0
210

இன்றைய திகதியில் உலகம் முழுவதும் 466 மில்லியன் மக்கள் காது கேளாமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 2050ஆம் ஆண்டில் 900 மில்லியன் மக்களை எட்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவிக்கிறது.

 12 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் காது கேளாமையினால்  பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒரு பில்லியனை தாண்டும் என அச்சுறுத்துகிறது. அதாவது உலகத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட மூன்றில் ஒருவருக்கு காது கேளாமை பிரச்சினை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது.

பாரம்பரிய மரபணு கோளாறு, கிருமித்தொற்று, ஒலி மாசு, வயதாவதைத் தடுப்பதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள், தொடர்ந்து அதிக ஒலிகளை ஏற்படுத்தும் இடங்களில் பணியாற்றுவது உள்ளிட்ட பல காரணங்களால் காது கேளாமை ஏற்படுவதாக  வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கான சிகிச்சையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலமாகவே இதனை கட்டுப்படுத்துகிறார்கள்.

குழந்தைகளை பொருத்தவரை அவர்களை தாக்கும் ரூபெல்லா காய்ச்சல் மெனிசிடீஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல், மம்ப்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால்தான் காது கேளாமைக்கு ஆளாகிறார்கள்.

அதிலும் தற்போதைய இளைய தலைமுறையினர் ஒலியளவை அதிகமாக வைத்துக்கொண்டு பாடல்களைக் கேட்பது, பயணித்துக்கொண்டே பேசுவது அதிகரித்துவிட்டது.  ஒவ்வொருவரும் வைத்தியத்துறை பரிந்துரைத்த டெசிபல்களைவிட அதிக அளவிலான டெசிபல்களில்தான் ஒலிகளை கேட்கிறார்கள். இதைக் குறைத்துக்கொண்டு, காதுகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து, இதற்குரிய பாதிப்பினை தொடக்க நிலையில் கண்டறிந்து, அதற்கு தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 காது கேளாமையால்அதிக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, அவர்களின் ஐந்து வயதில் பொருத்தமான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் எதிர்பார்த்த முழுமையான பலன் கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

டொக்டர் வேணுகோபால்

தொகுப்பு அனுஷா.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.