போர்க்குற்றங்கள்: தெற்கின் காலைச் சுற்றிய பாம்பு : இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்பதை வைத்து. சத்திரியன் (கட்டுரை)

0
294

சிங்­கள மக்­க­ளிடம் ஆத­ரவும் அனு­தா­பமும் தேடிக் கொள்­வதே கோத்தாபய ராஜபக் ஷவினதும் மஹிந்த தரப்­பி­னதும் இலக்­காக இருக்­கி­றது. இதனை வைத்து சிங்­கள மக்­களை எப்­படித் தமது பக்கம் திருப்ப முடியும் என்­பது ராஜபக் ஷவி­னருக்கு நன்­றா­கவே தெரியும்.

படை­யி­னரைப் பாது­காப்­பது என்ற பெயரில் அவர்கள் தம்மைக் காப்­பாற்றிக் கொள்ளத் தான்

முற்­ப­டு­கி­றார்கள் என்­பதைக் கூடப் புரிந்து கொள்­ளாமல் சிங்­கள மக்கள் கண்­மூ­டித்­த­ன­மாக ஆத­ரவு அளிப்­பார்கள் என்­பதை அவர்கள் அறி­வார்கள் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் ஜெனீ­வாவில் நாளை ஆரம்­பிக்­க­ப்படவுள்ள நிலையில், இலங்­கையில் போர்க்­குற்­றங்கள் தொடர்­பான விவா­தங்கள் சூடு­பி­டித்­தி­ருக்­கின்­றன.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மையில் வடக்­கிற்கு மேற்­கொண்ட பய­ணத்தின் போது, கிளி­நொச்­சியில் வைத்து இதற்குப் பிள்­ளையார் சுழியைப் போட்­டி­ருந்தார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நோக்கம், போர்க்­குற்­றங்கள் தொடர்­பான விவா­தங்­களைக் கிளப்பி விடு­வ­தல்ல.

அவ­ருக்குத் தேவை­யா­னது, போர்க்­குற்­றங்­களை இரண்டு தரப்­பு­களும் மறந்து, மன்­னித்து விட வேண்டும் என்­பது தான். அதனை வலி­யு­றுத்தப் போய் அவர் தமிழ் மக்­க­ளி­டமும், அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் வாங்கிக் கட்டிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அதே­வேளை, போர்க்­குற்­றங்­களே நடக்­காத நிலையில் போர்க்­குற்­றங்­களை இரண்டு தரப்­பு­களும் மறந்து விட வேண்டும் என்று கூறி­யுள்­ளதன் மூலம், போர்க்­குற்­றங்கள் நடந்­தி­ருப்­பதை பிர­தமர் ரணில் ஒப்புக்கொண்டு, இரா­ணு­வத்­தி­ன­ரையும் நாட்­டையும் காட்டிக் கொடுத்து விட்டார் என்று மஹிந்த தரப்­பி­னரும் சிங்­கள அடிப்­ப­டை­வாத சக்­தி­களும் அவரைத் தாக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க போர்க்­குற்­றங்கள் நடந்­ததை ஒப்­புக்­கொண்டு விட்டார் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் கூறி­யதை வைத்துக் கொண்டு தான், மஹிந்த தரப்பு ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான தற்­போ­தைய பிர­சாரப் போரை ஆரம்­பித்­தது.

மஹிந்த தரப்பின், தாக்­குதல் ஆரம்­பித்த பின்னர், கிளி­நொச்­சியில் போர்க்­குற்­றங்கள் பற்றி மறை­மு­க­மாக கூறி­ய­வற்றை ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொழும்பில் வைத்து வெளிப்­ப­டை­யா­கவே கூறினார்.

மஹிந்த ராஜபக் ஷவும், கோத்­தா­பய ராஜ­பக்­ஷ­வுமே போர்க்­குற்­றங்­களை ஊக்­கு­வித்­தனர். அதனை அனு­ம­தித்­தனர் என்று அவர் குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

இந்­த­நி­லையில் தான், போர்க்­குற்­றங்கள் இப்­போது கொழும்பு அர­சி­யலில் பிர­தான

பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­டர்கள் நடக்­கின்ற போது, பொது­வா­கவே தமிழர் தரப்பு தான் போர்க்­குற்­றங்கள் என்ற விட­யத்­துக்கு முன்­னு­ரிமை கொடுத்து போராட்­டங்­களை நடத்­து­வது வழக்கம். இந்­த­முறை நிலைமை தலை­கீ­ழாக மாறி­யி­ருக்­கி­றது.

இறு­திக்­கட்டப் போரில் போர்க்­குற்­றங்கள் நடந்­தன என்றும் நடக்­க­வில்லை என்றும் சிங்­கள அர­சியல் தலை­மைகள் மாத்­தி­ர­மன்றி, படை அதி­கா­ரி­க­ளுக்­குள்­ளேயும் கூட முரண்­பா­டுகள் வெடித்­தி­ருக்­கின்­றன. இது 10 ஆண்­டு­க­ளாக போர்க்­குற்­றங்­க­ளுக்­கான நீதியைக் கோரி போராட்­டங்­களை நடத்தி வரு­கின்ற தமிழர் தரப்­புக்கு சாத­க­மான ஒரு நிலை­யாகும்.

ஏனென்றால், இது­வரை தமிழர் தரப்பில் இருந்து மாத்­தி­ரமே போர்க்­குற்­றங்கள் நடந்­தன என்று பேசப்­பட்­டது. இப்­போது அப்­ப­டி­யல்ல,

போர்க்­குற்­றங்­க­ளுக்­கான நீதி வழங்­கப்­ப­டு­கி­றதோ இல்­லையோ, போர்க்­குற்­றங்கள் நடந்­தன என்று ஒப்­புக்­கொள்ளும் நிலை ஒன்று தெற்­கிலும் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கருத்­துக்­களை வைத்துக் கொண்டு அவர் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார், இரா­ணு­வத்­தி­ன­ருக்கு துரோகம் இழைத்து விட்டார் என்று சிங்­கள மக்கள் மத்­தியில் பிர­சாரம் செய்­வதில் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவ­ரது ஆத­ரவு அர­சி­யல்­வா­தி­களும், கோத்­தா­பய ராஜபக் ஷவும் தீவிரம் காட்டி வரு­கின்­றனர்.

போர்க்­குற்­றங்­களை ஒப்புக்கொண்டு, அவற்றை மன்­னித்து மறந்து விட வேண்டும் என்று ரணில் தரப்பு வலி­யு­றுத்தும் நிலையில், போர்க்­குற்­றங்­களை ஒப்­புக்­கொண்டால் அதற்குப் பதி­ல­ளிக்க வேண்­டிய பொறுப்பு தமக்கு ஏற்­படும் என்­பதால், போர்க்­குற்­றங்­களே நடக்­க­வில்லை என்று மஹிந்த தரப்பு ஒற்­றைக்­காலில் நிற்­கி­றது.

இங்கு முக்­கி­ய­மாக குறிப்­பிட வேண்­டிய விடயம், போருடன் தொடர்­பு­பட்ட தரப்­பு­களே, போர்க்­குற்­றங்கள் நடந்­த­னவா- இல்­லையா என்ற விட­யத்தில் இரண்­டு­பட்டு நிற்­பது தான்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க இறு­திக்­கட்டப் போருடன் தொடர்­பு­பட்­டி­ருக்­க­வில்லை. அவர் அப்­போது எதிர்க்­கட்­சியில் இருந்தார்.

ஆனால் இப்­போது அவ­ரது கட்­சியில் உள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தான் இறு­திக்­கட்டப் போரில் இரா­ணு­வத்­துக்கு தலைமை தாங்­கி­யவர்.

அவர், போர்க்­குற்­றங்­களில் படை­யினர் ஈடு­ப­ட­வே­யில்லை என்று கூற­மு­டி­யாது, சில படை­யினர் போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்­டனர் என்று தெளி­வாக கூறு­கிறார்.

அதே­வேளை, போர்க்­கா­லத்தில் தானே பாது­காப்புச் செய­ல­ராக இருந்தேன் என்றும், படை­யினர் ஒழுக்­க­மாக செயற்­பட்­டனர் போர்க்­குற்­றங்­களில் ஈடு­ப­ட­வில்லை என்று கோத்­தா­பய ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார்.

கடந்­த­வாரம், கொழும்பில் செய்­தி­யாளர் சந்­திப்பு ஒன்றை நடத்­திய முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெயரல் தயா ரத்­நா­யக்க, எயர் சீவ் மார்ஷல் றொஷான் குண­தி­லக, முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் திசார சம­ர­சிங்க ஆகி­யோரும், போர்க்­குற்­றங்­களை ஒப்­புக்­கொள்­ளா­வி­டினும், சில ஒழுங்­கீ­னங்கள் நடந்­தி­ருக்­கலாம் என்­பதை மறுக்கும் நிலையில் இருக்­க­வில்லை.

அவ்­வா­றான செயல்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை நடத்தி குற்­ற­மி­ழைத்­த­வர்கள் தண்­டிக்­கப்­ப­டலாம் என்­பதை அவர்கள் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்கள்.

அத்­துடன் இரண்டு தரப்­பு­களும் அனைத்­தையும் மறந்து விட வேண்டும் என்­பது போலவே அவர்­களின் கருத்­துக்­களும் அமைந்­தி­ருந்­தன.

ஆனால், கோத்­தா­பய ராஜபக் ஷவோ எந்­த­வொரு மீறல்­களும் நடக்­க­வில்லை என்­பதை வலி­யு­றுத்தி வரு­வ­துடன், அவ்­வாறு மீறல்கள் நடந்­த­தாக ஒப்­புக்­கொள்­ளப்­ப­டு­வதை தேச துரோ­க­மாக, நாட்டை காட்டிக் கொடுக்கும் செய­லாக அடை­யா­ளப்­ப­டுத்த முற்­ப­டு­கிறார்.

கோத்­தா­பய ராஜபக் ஷவும், மஹிந்த ராஜபக் ஷவும், போர்க்­குற்­றங்கள் என்ற விவ­காரம் தலை­யெ­டுக்கும் போதெல்லாம், அதனை வன்­மை­யாக மறுப்­ப­தற்குக் காரணம் இருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக, பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­போது தான், இறு­திக்­கட்டப் போர் நடந்­தது. அந்தக் கால­கட்­டத்தில் பாது­காப்புச் செய­ல­ராக கோத்­தா­பய ராஜபக் ஷ இருந்தார். அவரே போர் தொடர்­பான முடி­வு­களை எடுத்தார்.

எனவே, இறுதிப் போரில் போர்க்­குற்­றங்கள் நடந்­தன என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால், முப்­ப­டை­க­ளி­னதும் தள­பதி என்ற வகையில், மஹிந்த ராஜபக் ஷவும், பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை வழி­ந­டத்­தி­யவர் என்ற வகையில் கோபத்­தா­பய ராஜபக் ஷவும் பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலை ஏற்­படும்.

இறு­திக்­கட்டப் போரின் போது, கோத்­தா­பய ராஜபக் ஷ போரை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு இர­க­சிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை வைத்­தி­ருந்தார் என்றும், அதற்கு மஹிந்த ராஜபக் ஷ அனு­மதி அளித்­தி­ருந்தார் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா கூறி­யி­ருக்­கிறார்.

ஆனால் அந்த இர­க­சிய நிகழ்ச்சி நிரல் என்­ன­வென்­பதை, அவர் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

எனினும், போரின் போது, தான் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த போதும், அந்த இர­க­சிய நிகழ்ச்சி நிரலை தனக்குத் தெரி­யாமல் கோத்­தா­பய ராஜபக் ஷ செயற்­ப­டுத்­தினார் என்றும், அதற்கு முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய ஒத்­து­ழைத்தார் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்ளார்.

இந்த இர­க­சிய நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில், போரின் இறு­தி­யிலும், அதன் பின்­னரும் சில குற்­றங்கள் இடம்­பெற்­ற­தாக எனக்குத் தகவல் கிடைத்­தது. எனவே, இரா­ணு­வத்­தினர் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மஹிந்த ராஜபக் ஷவும், கோத்­தா­பய ராஜபக் ஷவும், ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரி­யவும் பொறுப்­புக்­கூற வேண்டும் என்­பது சரத் பொன்­சே­காவின் குற்­றச்­சாட்டு.

இந்­த­வே­ளையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க போர்க்­குற்­றங்கள் பற்­றியும், மறப்போம் மன்­னிப்போம் என்றும் பேசு­வதால் அவர்­க­ளுக்கு பெரிய அர­சியல் நலன்கள் ஏதும் கிடைத்து விடாது.

ஜெனீ­வாவைச் சமா­ளிக்கும் யுக்­தி­யாக அது பார்க்­கப்­பட்­டாலும், இத்­த­கைய கருத்­துக்கள் சிங்­கள மக்கள் மத்­தியில் எடு­ப­டாது. அது எதிர்­ம­றை­யான தாக்­கத்­தையே ஏற்­ப­டுத்தக் கூடி­யது.

அதே­வேளை, கோத்­தா­பய ராஜபக் ஷவோ, இந்த விவ­கா­ரத்தை அர­சியல் மயப்­ப­டுத்தும் முனைப்பில் இருக்­கிறார். இரா­ணு­வத்தைக் காட்டிக் கொடுத்து விட்­டார்கள் என்­பதை வைத்து, சிங்­கள மக்­க­ளிடம் ஆத­ரவும் அனு­தா­பமும் தேடிக் கொள்­வதே அவ­ரதும் மஹிந்த தரப்­பி­னதும் இலக்­காக இருக்­கி­றது.

இதனை வைத்து சிங்­கள மக்­களை எப்­படித் தமது பக்கம் திருப்ப முடியும் என்­பது ராஜபக் ஷவி­ன­ருக்கு நன்­றா­கவே தெரியும். படை­யி­னரைப் பாது­காப்­பது என்ற பெயரில் அவர்கள் தம்மைக் காப்­பாற்றிக் கொள்ளத் தான் முற்­ப­டு­கி­றார்கள் என்­பதைக் கூடப் புரிந்து கொள்­ளாமல் சிங்­கள மக்கள் கண்­மூ­டித்­த­ன­மாக ஆத­ரவு அளிப்­பார்கள் என்­பதை அவர்கள் அறி­வார்கள்.

இந்தச் சந்­த­டியில், கோத்­தா­பய ராஜபக் ஷ ஒரு உண்­மையை ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார். தமிழ் மக்கள் மத்­தியில் தனது அர­சியல் இருப்பை தக்­க­வைத்துக் கொள்­ளவே, ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொய் கூறு­கிறார் என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

போர்க்­குற்­றங்கள் விட­யத்தில் தமிழ் மக்­களின் கருத்து தமது கருத்­துடன் இணக்­க­மா­னது அல்ல என்­பதை அவர் இதன்­மூலம் ஏற்றுக் கொண்­டுள்ளார்.

தமிழ் மக்களை விடுவிக்கவே போரை நடத்தினோம் என்றும், புலிகளிடம் இருந்து விடுவித்ததால் தமிழ் மக்கள் தமக்குப் பின்னால் இருக்கிறார்கள் என்றும் ராஜபக் ஷவினர் கூறி வருவது பொய்யே என்பதை, கோத்தாபய ராஜபக் ஷவின் இந்தக் கருத்தே வெளிப்படுத்தி நிற்கிறது.

அதைவிட, தமிழ் மக்களின் மத்தியில் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள, ரணில் இவ்வாறு கூறியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ள கோத்தாபய ராஜபக் ஷ, தெற்கிலுள்ள மக்கள் ஒருபோதும் அவரை மன்னிக்கமாட்டார்கள், அதற்கான தண்டனையை தேர்தலின்போது அவர் எதிர்நோக்குவார் என்றும் கூறியிருக்கிறார்.

இதன்மூலம், தமிழர்களும், சிங்களவர்களும் போர்க்குற்றங்கள் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பதையும் அவர் உறுதி செய்திருக்கிறார்.

ஆக, போர்க்குற்றங்கள் என்பது இப்போது தெரிந்தோ தெரியாமலோ, சிங்கள அரசியல் தலைமைகளின் காலைச் சுற்றிய பாம்பாக மாறி விட்டது என்பது தான் உண்மை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.