இந்த வார ராசிபலன்… பிப்ரவரி 18 முதல் 24 வரை!

0
180

mesha_12361மேஷராசி அன்பர்களே!

வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த சுபச் செய்தி கிடைக்கும். மற்றவர்களுடன் தேவையற்ற கசப்பு உணர்வு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செலவுகள் சற்று அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். ஆனால், எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவர்களுக்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் கூடுதல் கவனம் செலுத்துப் படிக்கவும், சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறவும் முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்ட நாள்கள்: 22, 23, 24
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

rishaba_12105ரிஷபராசி அன்பர்களே!

இந்த வாரம் பல வகைகளிலும் அனுகூலப் பலன்களைத் தருவதாக அமையும். பணப் புழக்கம் அதிகரிப்பதுடன் சுபச் செலவுகளும் ஏற்படும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது, கைப் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, அந்நி யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதாலும், எதிர்பார்த்த சலுகைகள் கிடப்பதாலும் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சக ஊழியர்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகளும் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயன் தரும்.

மாணவர்கள் பாடங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 19, 20, 23, 24
அதிர்ஷ்ட எண்கள்:3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்
தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வானாளும்மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகிவீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடமலைமேல்
கானாறாய்ப்பாயும் கருத்துடையேனாவேனே.

mithuna_12420மிதுனராசி அன்பர்களே!

வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்குச் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வதை இந்த வாரம் தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கலைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.
மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: 20,21,22
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

kadaga_12131 கடகராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள் களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை. போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 22,23,24
அதிர்ஷ்ட எண்கள்:7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபமேற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

simma_12517சிம்மராசி அன்பர்களே!

பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே பிரச்னைகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள்.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர் களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவர்கள் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கும். அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 23,24
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

kanni_12200கன்னிராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும்.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புப வர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.

மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆசிரியர்கள் தருவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 21, 23
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

dhulam_12467துலாராசி அன்பர்களே!

வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டா கும். நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். வீண்செலவுகள் ஏற்படுவதற்கில்லை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைத்துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.ஜோதிட மாமணி கிருஷ்ண துளசி

மாணவர்கள் படிப்பில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சிலருக்குப் படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள நேரிடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18,19,20,21
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே

viruchi_12181விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார வசதி திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மாணவர்கள் தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.

குடும்ப நிர்வாகத்தைக் கவனிக்கும் பெண்களுக்குப் பொறுப்புகள் கூடும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 20, 21, 22, 23
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!

dhanushu_12448தனுசுராசி அன்பர்களே!

பணவரவுக்குக் குறைவிருக்காது. ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது. மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும்.குழந்தைகளுக்காகச் செலவுகள் செய்யவேண்டி இருக்கும்.

அலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குச் சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக் குறைவும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 22,23,24
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
சந்திராஷ்டம நாள்கள்: 18,19

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

mgaram_12105மகரராசி அன்பர்களே!

எதிர்பார்த்ததைவிட வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். அதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காகக் கூடுதலாக உழைக்கவும் வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

மாணவர்கள் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு, அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். ஆசிரியர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மன நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 18, 23, 24
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
சந்திராஷ்டம நாள்கள்: 19, 20, 21

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.

kumba_12371கும்பராசி அன்பர்களே!

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித் துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பயணங்களும் அதனால் ஆதாயமும் ஏற்படும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு பெறும் வாய்ப்பு ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 20, 21, 22, 24
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சந்திராஷ்டம நாள்கள்: 22, 23

வழிபட வேண்டிய தெய்வம்: வீரபத்திரர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலமிலன் நாடொறு நல்குவான் அலன்
குலமிலராகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.

meenam_12043 மீனராசி அன்பர்களே!

பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 20,22
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
சந்திராஷ்டம நாள்: 24

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பாரார் விண்ணவரும் பரவிப்பணிந் தேத்தநின்ற
சீரார் மேனியனே திகழ்நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சலென்னே

ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.