இதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்! – கும்பகோணத்தில் பரபரப்

0
178

கும்பகோணம் அருகே கல்லுாரி மாணவியை இதயத்திற்காக கடத்தப்பட்டு இருப்பதாகவும் உடலை அனுப்பி வைக்க விலசாமும், 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டும் வந்த குறுஞ்செய்தியால் தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கல்லூரி மாணவி சுபஸ்ரீப்ரியா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் விளத்தொட்டி கிராமத்தை சேர்ந்த சுபஸ்ரீப்ரியா. 18 வயதான இவர் கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வருகிறார்.

நேற்று கல்லுாரிக்கு செல்வதற்காக சென்ற சுபஸ்ரீப்ரியா, இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தாய் சித்ரா, மகள் செல்போனிற்கு பலமுறை போன் செய்தும் சுபஸ்ரீப்ரியா போனை எடுக்கவில்லை.

இந்நிலையில், இரவு 10.53 மணியளவில் காணாமல் போன சுபஸ்ரீப்ரியா மொபைலில் இருந்து அவரது உறவு பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.

அதில் இந்த பெண்ணை கடத்தி விட்டோம், அவரது இதயம் தேவைப்படுகிறது. அத்துடன் `வீட்டின் முகவரியை கொடுங்க, உடலை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்.

அதற்கு 30 லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. அந்த குறுஞ்செய்தி தெளிவாகவும் டைப் செய்யப்படவில்லை.

இதையடுத்து உறவுப் பெண், சுபஸ்ரீப் பிரியாவின் தயார் சித்ராவிடம் அந்த தகவல் குறித்து கூறியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சித்ரா,

தனது மகளைக் காணவில்லை என பந்தநல்லுார் போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கும்பகோணம் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.