போர்க்­குற்ற விசா­ர­ணையை முதலில் நடத்­துங்கள் மன்­னிப்பு குறித்து பின் ஆராய்வோம் என்­கிறார் விக்கி

0
167

இலங்கை பிரதமர் ரணிலை நரியுடன் ஒப்பிட்ட விக்னேஸ்வரன்

சர்­வ­தேச உத­வி­யுடன் போர்க் குற்ற விசா­ரணை நடத்­துங்கள். நடந்­தவை இனப்­ப­டு­கொ­லையா என்­பதை முதலில் அறிந்து கொள்வோம். அதன் பின் மன்­னிப்புப் பற்றி ஆராய்வோம் என தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­கமும், முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ்வரன் தெரி­வித்தார்.

தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர்­க­ளுக்­கான கூட்டம் நேற்று கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­ற­போது அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

பிர­தமர் ரணிலின் பேச்­சுக்­களின் தாற்­ப­ரியம் என்ன? நாங்கள் உங்­க­ளுக்குப் பல்­கோ­டி­களைக் கொட்டிக் கொடுக்க உள்ளோம். மருத்­துவ மனை­களைக் கட்­டுங்கள், பிர­தேச சபைக் கட்­ட­டங்­களைக் கட்­டுங்கள், உடைந்து போன உங்கள் தெருக்­களை செப்­ப­னி­டுங்கள், பொரு­ளா­தார ஏற்றம் காணுங்கள். ஆனால் எங்­களின் இந்தக் கொடைக்­காக நீங்கள் செய்ய வேண்­டி­யது ஒன்றே ஒன்­றைத்தான்.

அதா­வது மன்­னித்து மறந்து விடுங்கள். பழை­ய­ன­வற்றை மறந்து விடுங்கள். உண்­மையைக் கண்­ட­றிய முனை­யா­தீர்கள். அப்­படிக் காண விழைந்தால் உங்­களின் இளை­ஞர்கள் செய்த குற்­றங்­களும் அம்­ப­லத்­திற்கு வந்­து­விடும். அது வேண்டாம்;;; மறந்து விடுவோம்; மன்­னித்து விடுவோம் என்று கூறி­யுள்ளார்.

அதா­வது உங்­க­ளுக்கு நாங்கள் வட-­கி­ழக்கு இணைப்பைத் தரு­கின்றோம். உங்கள் தாய­கத்தில் சுயாட்­சியைத் தரு­கின்றோம். சமஷ்டி ரீதி­யி­லான ஒரு அரசை உங்­க­ளுக்கு வழங்­கு­கின்றோம். பதி­லுக்கு நீங்கள் மறந்து விடுங்கள். மன்­னித்து விடுங்கள் என்று அவர் கூற­வில்லை.

மாறாக உங்­க­ளுக்குப் பணம் தரு­கின்றோம், உங்கள் உறுப்­பி­னர்­க­ளுக்கு சலு­கைகள் தரு­கின்றோம். உங்கள் பொரு­ளா­தார விருத்­திக்கு வழி சமைக்­கின்றோம்; நடந்து போனதை மறந்து விடுங்கள்; மன்­னித்து விடுங்கள் என்று தான் கூறு­கின்றார்.

_105678579_gettyimages-1068284026மன்னித்து விடுங்கள் என்று ரணில் கூறியதன் அர்த்தம் என்ன?

இதன் அர்த்தம் என்ன? ஜெனீ­வாவில் கேள்வி கேட்கப் போகின்­றார்கள். நாம் செய்­வ­தாகக் கூறி­ய­வற்றை இது­காறும் செய்­ய­வில்லை. இப்­போது உங்­க­ளுக்கு சலு­கை­களைக் கொடுக்க எண்­ணி­யுள்ளோம்.

கட்சி ரீதி­யாக அதைச் செய்ய எண்­ணி­யுள்ளோம். ஏற்­றுக்­கொண்டு உங்கள் உரி­மை­களைக் கேளா­தீர்கள், உரித்­துக்­களை நிலை­நாட்டப் பார்க்­கா­தீர்கள்.

தமிழ்ப் பிர­தே­சங்­களில் சிங்­கள ஏகா­தி­பத்­தி­யங்கள் தொடர்ந்து நிலைக்கச் செய்ய உங்­களின் ஒத்­து­ழைப்பை நல்­குங்கள். ஜெனீ­வாவில் மீண்டும் கால அவ­காசம் பெற்றுக் கொடுங்கள் என்று கூறிச் சென்­றுள்ளார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மௌனம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மௌன­மாகத் தலை­ய­சைத்­ததைப் பார்த்தால் அதற்கு அவர்கள் தயா­ராகி விட்ட மாதிரித் தெரி­கின்­றது. “எமது பிர­தேச அபி­வி­ருத்­திக்­கு­ரிய பணத்தை எம்­மூ­டாக வழங்­குங்கள்.

நாங்கள் எங்கள் மக்­களைப் பணம் கொடுத்து வாங்கி விடு­கின்றோம்” என்று அவர்கள் கூறு­வது போலத் தெரி­கி­றது. துரை­யப்பா, குமார சூரியர், டக்ளஸ் தேவா­னந்தா போன்­ற­வர்கள் இதைத்­தானே கூறி­னார்கள். அர­சாங்­கத்­திடம் இருந்து பணத்தைக் கறந்து, பத­வி­களைப் பெற்று, பொரு­ளா­தார விருத்­தியை உறுதி செய்து எமது நிலையை சீர்­செய்வோம்.

உரி­மை­க­ளையும் உரித்­துக்­க­ளையும் மறந்­து­வி­டுவோம். இவ்­வாறு அவர்கள் கூறிய போது நாங்கள் என்ன கூறினோம்? அவர்­களைத் “தமி­ழினத் துரோ­கிகள்” என்றோம். இன்று என்ன நடந்­துள்­ளது? அவர்­க­ளுக்கு அர­சாங்கம் உத­விகள் கொடுத்தால் அவர்கள் துரோ­கிகள். எங்­க­ளுக்கு அவ்­வாறு உத­விகள் கிடைத்தால் அது எமது மேலாண்;மைத் திறன். எங்கள் புத்திக் கூர்­மையின் வெளிப்­பாடு. தந்­தி­ரோ­பாயத் திறமை. இங்கு எமது மக்­களின் வருங்­காலம் பற்­றிய சிந்­த­னைகள் அடி­பட்டுப் போகின்­றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அரசாங்கத்திற்குக் கூறுவது என்ன?

ஆனால் எமது தலை­வர்கள் அர­சாங்­கத்­திற்­கு­கூ­று­வது என்ன? நாங்கள் எங்கள் மக்­க­ளுக்கு உங்கள் பணத்தைக் கொடுத்து வாக்­கு­களைப் பெற்­று­வி­டுவோம். அதா­வது எம் மக்­க­ளுக்கு இலஞ்சம் கொடுத்து அவர்­களை வாங்­கி­வி­டுவோம். அதற்­கென்ன? நாங்கள் ஜெனீ­வாவில் கால அவ­காசம் பெற்றுத் தருவோம். பௌத்­தத்­திற்கு வட­கி­ழக்கில் முத­லிடம் அளிப்போம்.

வட­கி­ழக்கை இணைக்­காது வைத்­தி­ருக்க எமது பூரண சம்­மதம் தெரி­விப்போம், சமஷ்டி கேட்க மாட்டோம். உள்­நாட்டு சுயாட்­சியைக் கேட்க மாட்டோம். இதற்கு எதிர்ப்பு தெரி­வித்தால் அவர்­களைத் “துரோ­கிகள்” என்று பச்சை குத்தி கழு­தைகள் மேலேற்றி வலம் வரச் செய்வோம் என்று தான் கூறாமல் கூறு­கின்­றார்கள்.

இந்த விதமான நடவடிக்கைகள் எங்களை எங்கே கொண்டு செல்லப் போகின்றன? அரசாங்கப் பணம் பெறுபவர்கள் தம்மை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். தமது உற்றார் உறவினர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார். பத்து வருடங்களில் வடகிழக்கு சிங்கள, பௌத்தப் பிரதேசமாக மாறும். மன்னிப்பின் மகத்துவம் இதுதான்.

_105678672_137803f1-9448-4505-aab2-795d0e165b0fரணிலை நரியுடன் ஒப்பிட்ட விக்னேஸ்வரன்

நரி வந்து புள்ளிமானிடம் கூறுகின்றது. உன் மகனைக் கொன்று உண்டவன் நான்தான். மன்னித்துவிடு. இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். உன் மற்றைய குட்டிகளையும் என்னிடம் அனுப்பு. நான் அவற்றிற்குப் பொறுப்பு. அவற்றையும் நான் கொன்று சாப்பிட்டால் மீண்டும் உன்னிடம் மன்னிப்புக் கேட்பேன். வருத்தப்படாதே. உன்னையும் உன் குட்டிகளையும் என் பிரதேசத்தினுள் வேண்டுவது போல என் கட்டுப்பாட்டில் உலாவிவர நான் உனக்கு பூரண உரித்துத் தருகின்றேன் என்று கூறுகிறது.

உண்­மையைக் கண்­ட­றி­ய­வி­டாமல் பிர­தமர் தடுப்­பது எமது உரி­மை­களை மறுப்­ப­தற்­காக! எமக்­குள்ள உரித்­துக்­களை மறைப்­ப­தற்­காக. உலக நாடு­களின் பார்வை உண்மையைக் கண்டறிந்து விடும் என்ற பயத்தினால். இதற்குத் துணைபோகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் துணிந்து விட்டார்கள்.

இதுகாறும் எம் மக்கள் பட்ட பாட்டை மறந்து, ஆயுதமேந்த வேண்டிய காரணத்தை மறந்து, உயிர்த் தியாகங்கள் செய்ததை மறந்து, பிச்சைப் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து எம்மக்களுக்குப் பிச்சைபோட முன்வந்துள்ளார்கள் என்றார்.

சர்வதேச விசாரணை

எம்மவர் குற்றங்களும் வெளிவந்துவிடுவன என்று மிரட்டுகிறார் பிரதமர். குற்றம் செய்யாத பலரை சிறைகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தீர்கள். எம்மைக் கொன்று குவித்தவர்களை சித்திரவதை செய்தவர்களை இதுவரை அடையாளப்படுத்தாது அவர்களுக்கு மன்னிப்பை வேண்டி நிற்கின்றீர்கள்.

அவ்வாறு செய்தவர்கள் யார் என்பதை முறையாக சர்வதேச விசாரணை மூலமாக முதலில் கண்டறியுங்கள். அதன் பின் மன்னிப்புப் பற்றிக் கதைக்கலாம் என்று பிரதமரிடம் கூற எங்களுள் எவரும் இல்லை.

ஆகவே நாங்கள் அரசிடம் கூறுகின்றோம் சர்வதேச உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொள்வோம். அதன் பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என்றார் விக்னேஸ்வரன்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.