4 நாட்கள் நடைபெறும் சவுந்தர்யா – விசாகன் திருமணம்

0
218

ராதா கல்யாண வைபவத்துடன் சவுந்தர்யா – விசாகன் திருமணம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற விருந்தில் தாம்பூலப்பையில் விதைகள் கொடுத்து ரஜினி அசத்தினார். #SoundaryaRajinikanth
ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகனுக்கும் நாளை (10-ந்தேதி) ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடக்க உள்ளது.

திருமண நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நேற்று ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ரஜினியுடன் நட்புடன் இருக்கும் நல்லி குப்புசாமி, கண்ணதாசன் மகன் குடும்பம், ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள் என சினிமா சாராத நபர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

201902091626025524_1_Soundarya-Rajinikanth-Marriage3._L_styvpfபொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பது தான் வழக்கம். சிலர் மரக்கன்றுகளைக் கொடுக்கின்றனர். ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தினார்.

அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது. மரம் வளர்க்க விரும்புபவர்கள், முடிந்தவர்கள் அந்த விதைகளை நட்டு மரம் வளர்க்கலாம். முடியாதவர்கள் ஏதோ ஒரு இடத்தில் வீசி எறிந்தால் போதும். அந்த விதை செடியாக வளர்ந்துவிடும். ரஜினியின் இந்த அசத்தல் ஐடியாவுக்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்று ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடக்கிறது. நாளை மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது.

அதைத் தொடர்ந்து 11-ந்தேதி எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

LEAVE A REPLY

*