பாலத்திற்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி : மயிரிழையில் உயிர் தப்பிய மூவர்!!

0
104

மட்டக்களப்பு நகரில் உள்ள புதுப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியினை விட்டு பாலத்திற்குள் பாய்ந்துள்ள நிலையில் அப்பகுதியில் நின்றவர்கள் விரைவாக செயற்பட்டதன் காரணமாக மூன்று பேர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

இன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள உறவினரை பார்க்கச்சென்ற இரண்டு பெண்களும் முச்சக்கர வண்டி சாரதியுமே மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

A3-6இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு பெண்களும் மீட்கப்பட்டு உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுப்பாலத்தின் இரு பகுதியும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதன் காரணமாக பல விபத்து சம்பவங்கள் அடிக்கடி இப்பகுதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.