யானை தடுப்பு அகழியை கடக்க முடியாமல் விவசாய நிலத்தில் சுற்றித் திரிந்த குட்டியானையை, மீட்ட மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதனை காட்டுக்குள் விட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை கிராமத்தில், இன்று அதிகாலை காட்டு யானை கூட்டம் ஒன்று குட்டியுடன் புகுந்து சின்னராஜ் என்பவர் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனை கண்ட விவசாயிகள் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தொடாந்து அதிகாலை வேட்டைத்தடுப்பு காவலர்களுடன் சென்ற வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். அப்போது அனைத்து யானைகளும் காட்டுக்குள் விரட்டும் சென்றுவிட்ட நிலையில், அந்த கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி யானை மட்டும் யானை தடுப்பு குழிகள் ஆழமாக இருந்ததால், அதனை கடந்து வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் விவசாய நிலத்திலேயே சுற்றி வந்தது.
மேலும் தாய் யானை வனப்பகுதிக்குச் சென்றதால் செய்வதறியாது நின்ற குட்டி யானையை, பலகட்ட போராட்டத்துக்குப் பின்னர் குட்டியானையை மீட்ட வனத்துறையினர் அகழியை தாண்டி தாய் யானையிடம் கொண்டு சேர்க்க வனத்துக்குள் விட்டனர்.