தூக்கில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகை!

0
170

காதலர் ஏமாற்றி விட்டுச் சென்றதால், பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்திய செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.

தெலுங்கில் முன்னனி சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் ஜான்சி. இவர் நடித்த ‘பவித்ரா பந்தம்’ என்ற சீரியல் மிகவும் பிரபலமானதாகும்.

இவருக்கு சூர்யா என்பவருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

ஆனால், சூர்யா, ஜான்சி காதலுக்கு அவர்களது பெற்றோர்கள் இரு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே ஜான்சியை விட்டு சூர்யா தனியாக பிரிந்து சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த ஜான்சி, ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஜான்சி தற்கொலை செய்து கொண்ட அறையில் அவரது கையடக்க தொலைபேசி, நாட்குறிப்பு போன்றவற்றை கைப்பற்றிய காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், சூர்யாவைப் பற்றிய தகவல்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Master_45de573c-29de-11e9-b7de-6a9a06b91305

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.