கடும் குளிரில் உறைந்து பனிக்கட்டியான கல்லூரி மாணவன்..!: வியந்து நின்ற கல்லூரி வளாகம்

0
137

அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் கடும் குளிரில் அமிழ்ந்துள்ள நிலையில், கல்லூரி மாணவன் ஒருவன் பனிக்கட்டியாக உறைந்துபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் போலார் வோர்டெக்ஸ் என்று அழைக்கப்படும் ஆர்க்டிக் பகுதி மேலடுக்கு காற்றழுத்தத் தாழ்வு அமைப்பினால் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவி வருகிறது.

வியாழக்கிழமை வரைக்கும் கடும் குளிருக்கு 10 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடுன், கடும் குளிரினால் அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

625.0.560.350.160.300.053.800.668.160.90இந்த நிலையில் அயோவா மாகாணத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கடும் குளிரில் சிக்கி பனிக்கட்டியாக உறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 வயதேயான குறித்த மாணவர் கல்லூரி வளாகத்தில் அதிகாலை 3 மணியளவில்அசைவின்றி கிடந்ததை சக மாணவர் கண்டு கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அவரை மீட்ட அவசர உதவிக்குழுவினர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குறித்த மாணவர் வைத்தியசாலையிலேயே உயிர் விட்டுள்ளார். குறித்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.