தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமி – ஆணவக் கொலையா?

0
108

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images
தமிழ் இந்து: “தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 16 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு”

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 16 வயது சிறுமியின் உடல் பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற நோக்கில் விசாரணை நடைபெற்று வருவதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“கயா மாவட்டத்தின் மான்பூர் பகுதியில் ஜனவரி 6-ம் தேதி 16 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரின் முகம் மற்றும் மார்புப் பகுதிகளில் ஆசிட் வீசப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் 28-ம் தேதி காணாமல் போன சிறுமி குறித்து, அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜன. 4-ம் தேதி அவர் அளித்த புகாரில் மகளை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜனவரி 6-ம் தேதி சிதைந்த நிலையில் சிறுமியின் உடல் அவரின் வீட்டின் அருகில் கண்டெடுக்கப்பட்டது. சில மீட்டர்கள் தூரத்தில் தலை கிடைத்தது.

சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். ஆணவக் கொலை என்பதற்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியதாக” இந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.