ரெளடி பேபி’ பாடலின் விடியோ: சாய் பல்லவி, பிரபுதேவாவுக்குக் குவியும் பாராட்டுகள்!…

0
160

“இப்பாடலின் விடியோவுக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இப்பாடல் சமூகவலைத்தளங்களில் உருவாக்கியுள்ள சாதனைகளைக் குறிப்பிட்டு…”,

தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் – மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – யுவன் சங்கர் ராஜா.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இப்பாடலைக் கண்ட ரசிகர்கள் நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகளை அளித்துள்ளார்கள்.

இரு நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பாடலுக்கு இதுவரை 1 கோடியே 18 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.

இதையடுத்து இப்பாடலின் விடியோவுக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இப்பாடல் சமூகவலைத்தளங்களில் உருவாக்கியுள்ள சாதனைகளைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

“,

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.