எந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்

0
178

திருவக்கரை ஆலயத்தில் மூலஸ்தானத்து இறைவன் முகலிங்கமாகக் காட்சி அளிக்கின்றார். இது வேறு எங்கும் காண முடியாத அற்புதத் திருக்காட்சியாகும்.

திருவக்கரை ஆலயத்தில் மூலஸ்தானத்து இறைவன் முகலிங்கமாகக் காட்சி அளிக்கின்றார். இது வேறு எங்கும் காண முடியாத அற்புதத் திருக்காட்சியாகும்.

அந்தந்த தலப்பெருமைக்கு ஏற்ப ஒருமுக லிங்கம், இருமுக லிங்கம், மும்முக லிங்கம், நான்முக லிங்கம், ஐம்முக லிங்கம் அமைத்தல் வேண்டும் என்பது சாஸ்திர விதி.

மேல் பாகம் ஈசான முகம், கிழக்கே தத்புருட முகம், தெற்கே அகோர முகம், வடக்கே வாம தேவ முகம், மேற்கே சந்தியோ சாத முகமும் அமையப் பெற்றது ஐந்து முக லிங்கம்.

ஐந்து முகலிங்கம் கொண்ட சிவஸ்தலம் வடக்கில் நேபாளத்திலும், தெற்கில் ஆந்திராவில் உள்ள காளஸ்திரியிலம் உள்ளது.

நான்கு முகம் கொண்ட லிங்கம் திருவண்ணாமலை வெளிப்பிரகார தெய்வமாகக் காணப்படுகிறது. மூன்று முகம் கொண்ட கருவறை லிங்கம் இந்தியாவில் இது ஒன்றே காணப்படுகிறது.

கருவறையில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் சேர்ந்த ஒரு திருவடிவமாய், முகலிங்கமாய் இறைவன் காட்சி அளிக்கின்றார்.

இங்கு கிழக்கே தட்புருட முகம், வடக்கே வாமதேவ முகமும், தெற்கே அகோர முகமும் அமையப் பெற்றுள்ளது.

அதிகாலையில் தட்புருட முகத்தை மஞ்சள் பூசியும், உச்சி காலத்தில் வாமதேவ முகத்தை சந்தனம் சாத்தியும், மாலையில் அகோர முகத்தை குங்குமம் அணிவித்தும், பூஜை செய்து வணங்கினால் அகிலத்தையே காக்கின்ற அம்மையப்பரின் அருள் நமக்கு கிடைக்கும். இந்தச் சிவலிங்கத்தில் அகோர முகத்தில் பெயருக்கேற்றார் போல் வாயின் இரு ஓரத்திலும் இரு கோரைப்பற்கள் உள்ளன.

இக்காட்சியை இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது மட்டும்தான் தெளிவாகக் காண முடியும்.

கருவறையின் இருபுறமும் 10அடி உயரத்தில் இரு துவாரபாலகர்கள் தங்கள் கால்களைக் கதைகளின் மேல்தூக்கி வைத்துக் கொண்டு உள்ளனர்.

கருவறையின் வலப்புறத்தில் பதினாறு பட்டை லிங்கம் அமைக்கப்பெற்றுள்ளது. இடப்புறத்தில் வீரபத்திரர் காட்சி தருகிறார்.

கருவறையின் உள் சுற்றில் முதலில் இருப்பது சமயக் குரவர்கள் நால்வர் சிலை. அதையடுத்து விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானையுடன் காணப்படு கிறார். பக்கத்தில் விஷ்ணு துர்க்கையும் பல்லவர் கால கணபதியும் உள்ளன.

கருவறைக்கு வடதிசையில் வக்கிர காளியின் சிறிய வடிவம் ஒன்றும் காணப்படுகிறது. கருவறைக்கு தென்திசை யில் குண்டலினி மாமுனிவர் என்ற சித்தரின் ஜீவ சமாதி உள்ளது.

இவர் ஜீவ சமாதி அடைந்ததும் லிங்கம் அமைக்கப்பெற்ற நிலையில் தனிக்கோவில் ஆகியது. இக்கோவிலை யடுத்து தென்புறம் நோக்கி வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான் அமைந்துள்ளார்.

காளி கோவிலின் உள்ளே சப்த மாதர்கள் உள் ளனர். அவர்கள் வராகி, இந்திராணி, கௌமாரி, வைஷ்ணவி, பிராமணி, துன் முகி, சாமுண்டி ஆகியோர் அமைக் கப்பட்டுள்ளனர். இவர்களில் சாமுண்டிக்குப் பதிலாக அன்னை ஆதிபராசக்தியே காளியாக உருவெடுத்துப் பக்தர்களுக்கு அருள்புரிகின்றார்.

இந்த சப்த மாதர் கோவில் அமைப்பும் வக்கிரக் காளியும் பிற்பட்ட பல்லவர் காலத்ததாகவோ, முற்பட்ட சோழர் காலத்ததாகவோ இருக்கலாம் என்றும் செம்பியின் மாதேவியால் புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் சமீப காலத்தில் நிகழ்த்தப் பெற்ற ஒரு திருப்பணியால் இதன் பழைய சிற்பங்கள் சிதைவுற்று விட்டன என்றும், இக்கோவில் சிற்பங்கள் பிற்காலத் திருப்பணியாளர்களால் இடமாற்றம் பெற்றுள்ளன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.