வடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம்

0
83

வடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இவருக்கான நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி சுரேன் ராகவன், கடந்த நொவம்பர் மாதம், சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராகவும், சிறிலங்கா அதிபரின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

வடக்கு மாகாண ஆளுனராக, தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

அதேவேளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், ஊவா மாகாண ஆளுனராகவும், மூத்த விரிவுரையாளர் தம்ம திசநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.