மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் செய்த காரியம்…வசமாகச் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள்…!!

0
140

மட்டக்களப்பில் லஞ்சம் வாங்கிய பொலீசார் இருவரை கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடமையில் இருந்த பேக்குவரத்து பொலீசார் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்த பயணி ஒருவரிடம் தலைக்கவசம் அணியாமல் சென்ற குற்றத்ததை மறைப்பதற்காக 10, 000 ரூபாய் லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

குறித்த பொலிசார் இருவரும் மிக நீண்ட நாட்களாக பலரிடம் இலஞ்சம் பெற்றுவந்த நிலையில் புலனாய்பு பிரிவினரின் உதவியுடன் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, பத்தாயிரம் ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் வைக்குமாறு கூறி அதனை எடுக்கும் போது அங்கு மாறு வேடத்தில் இருந்த உத்தியோகத்தர்களினால் கையும் களவுமாக இரண்டு பொலீசாரும் பிடிபட்டுள்ளனர்.

குறித்த பொலீசார் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.