எல்லாமே பொய், எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது – ஓவியா

0
149

ஓவியா – ஆரவ் இருவரும் காதலிப்பதாகவும், ஒரே வீட்டில் வசிப்பதாவும் தகவல் வெளியாகிய நிலையில், அதனை மறுத்துள்ள ஓவியா, தனக்கு கல்யாணத்திலும் நம்பிக்கை இல்லை என்று கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா அந்த நிகழ்ச்சியில் ஆரவ்வை காதலித்து அந்த காதல் தோல்வியில் முடிந்து தற்கொலை முயற்சி வரை சென்றார்.

வெளியில் வந்த அவர் மீண்டும் ஆரவ்வுடன் நட்பாக சுற்றுவதால் இருவரும் திருமணம் செய்யப் போவதாக செய்தி பரவுகிறது.

இதுபற்றி ஓவியா அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறி இருப்பதாவது:-

‘ராஜ பீமா’ படத்தில் நான் ஓவியாவாக தான் நடிக்கிறேன். அது ஒரு கவுரவ வேடம். நானும் ஆரவ்வும் ஆடிய பாடலை, ஆரவ்தான் பாடி இருக்கிறார்.

201901031339013264_1_Raja-Bheema-Arav-Oviya2._L_styvpfஎன்னை புகழ்ந்து எழுதப்பட்டுள்ள பாடல் அது. ‘ஓவியா ஆர்மி’, ‘பிக்பாஸ் குயின்’ இப்படிப் பல வார்த்தைகள் அதுல வரும். ‘பிக்பாஸ்’ சமயத்துல எனக்கும், ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதனால, நிறைய சண்டைகள்.

இப்போ நாங்க சமாதானமாகி விட்டோம். நானும் ஆரவ்வும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், லிவிங் டு கெதர்ல வாழ்றோம்னு பல வதந்திகள் சுத்துது. எல்லாமே பொய்.

அப்படி ஒண்ணு இருந்தா, நாங்களே சொல்வோம். ஆரவ் என் நண்பர், எனக்கு ஆதரவாக இருக்கிறார். தவிர எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா, வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்னு தெரியாது.

நான் சின்ன வயதில் இருந்தே சுதந்திரமா வளர்ந்த பொண்ணு. தன்னிச்சையா செயல்படுவேன். அதனால, கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல செட் ஆகும்னு தெரியலை. தவிர, எனக்கு ஒருத்தரோட சப்போர்ட் வேணும்னு இப்போ வரைக்கும் தோணல” இவ்வாறு அவர் கூறி இருக்கிறார். #Oviyaa #Arav #OviyaSingle

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.