காதலிக்கு கோயில் நிர்வாகம்…15 பாட்டில் விஷம்… 15 உயிர்கள் பலி! – மடாதிபதியின் குரூரம்

0
241

ர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 15 பக்தர்கள் உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து சாம்ராஜ் நகர் எஸ்.பி.தர்மேந்திர குமார் மீனா விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

சுலவாடி மாரம்மா கோயிலின் அறக்கட்டளைத் தலைவராக சாளூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி இருந்துள்ளார்.

அறக்கட்டளை நிர்வாகியாக சின்னப்பி என்பவரும் அவரின் ஆதரவாளர்களும் இருந்துள்ளனர்.

சாளூர் மடத்தில் பெரிய மடாதிபதி குருசாமிக்கும் இளைய மடாதிபதிக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.

இளைய மடாதிபதிக்கும் மாரம்மா கோயில் நிர்வாகிகளுள் ஒருவரான மாதேஷ் என்பவரின் மனைவி அம்பிகாவுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது.

கோயில் நிர்வாகத்தைக் கைப்பற்றி காதலி அம்பிகாவிடம் கொடுக்க இளைய மடாதிபதி திட்டமிட்டுள்ளார்.

சாளூர் மடத்துக்கும் பெரிய மடாதிபதிக்கும் அவப் பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் இளைய மடாதிபதிக்கு இருந்துள்ளது.

maramm_11021

மாரம்மா கோயில் நிர்வாகம் முழுவதையும் சின்னப்பி என்பவர் பார்த்து வந்துள்ளார்.

சமீபத்தில், தன் காதலி அம்பிகாவின் கணவர் மாதேஷை நிர்வாகியாக இளையமடாதிபதி நியமித்துள்ளார்.

சில நாள் கழித்து அம்பிகாவை கோயில் மேற்பார்வையாளராக நியமித்தார் இளைய மடாதிபதி.

‘சின்னப்பியை கோயில் நிர்வாகத்தில் இருந்து முற்றிலும் நீக்கிவிட வேண்டும். அப்போதுதான், நீங்கள் சொல்கிற மாதிரி நான் நடப்பேன் ‘ என்று அம்பிகா ஒரு கட்டத்தில் மகாதேவசாமிக்கு ஆசை காட்டியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி நடந்த விழாவின்போது, அம்பிகா, மாதேஷ், தொட்டையா ஆகியோர் கோயிலுக்கு விஷ பாட்டில்களுடன் வந்துள்ளனர்.

மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பி விஷத்தைத் தண்ணீரில் கலக்கி அன்னதானத்துக்காக வைத்திருந்த தக்காளி சாதத்தில் கலந்துவிட்டு வெளியேறியுள்ளனர்.

சிறிது நேரத்தில் பக்தர்கள் இறந்த தகவல் கிடைத்ததும் அம்பிகாவே போலீஸைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இளைய மடாதிபதிக்கும் போன் செய்து திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகக் கூறியுள்ளார். அன்னதான உணவில் 15 பாட்டில் விஷம் கலக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

temple-1_11291கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்தக் கோயில் இளைய மடாதிபதியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

கோயில் கோபுரம் கட்டுவதற்காக ஏராளமான நன்கொடை குவிந்துள்ளது. கோயிலில் இருந்து ஆண்டுக்கு ரூ.3 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதனால், கோயில் நிர்வாகத்தை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர மடாதிபதி முயன்றுள்ளார்.

மடாதிபதியின் போக்கு பிடிக்காத கிராம மக்கள்,  அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து நிர்வகித்துள்ளனர்.

வரவு செலவை சின்னப்பி கவனித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.1.5 கோடி செலவில் கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில்தான் அன்னதான சாதத்தில் விஷம் கலக்கப்பட்டு 15 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ambika__11393100 பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. 26 பேரின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேட்டூர் தொட்டையா,  மாரம்மா கோயிலில்  நாகசிலைகள் வைத்து பூஜை செய்து பணம் வசூலிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

சின்னப்பி, அவரை அங்கிருந்து விரட்டியுள்ளார். இதனால், தொட்டையாவும் சின்னப்பியை பழி வாங்கக் காத்திருந்துள்ளார்.

இதை அறிந்த அம்பிகா அவரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு இத்தகைய பாதகச் செயலை செய்துள்ளார்.

போலீஸ் விசாரணையில் உண்மை அனைத்தையும் அம்பிகா தெரிவித்ததையடுத்து இளைய மடாதிபதி மகாதேவசாமி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இவர் மீது ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இருந்துள்ளன.

அம்பிகா உள்ளிட்டோர் விஷம் கலந்த பிறகு சமையல் அறைக்கு வந்த சமையல்காரருக்கு ஏதோ ஒரு மோசமான வாடை அடிப்பதை உணர்ந்தும் அசட்டையாக இருந்துள்ளார்.

சமையல்காரர் சுதாரித்திருந்தால்கூட அப்பாவிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.