மனைவியின் தங்கையுடன் கணவன் கள்ள உறவு..நீதிமன்ற தீர்ப்பை உதாரணம் காட்டி தப்பிக்க முயற்சி!!- (வீடியோ)

0
358

தமிழகத்தில் தனது தங்கையுடன் இருந்த கள்ள உறவை கண்டித்த மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. அதிமுகவைச் சேர்ந்த இவர் பழனி மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக உள்ளார்.

இவருக்கு தங்கவில்லம்மாள் என்ற மனைவியும், அயன், ஜெயராஜ் என இரு மகன்களும் உள்ளனர் தங்கவில்லம்மாளின் தங்கை சத்யாவுக்கும், ராமமூர்த்தி என்பவருக்கும் திருமணமாகியுள்ளது.

அதன் பின் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இளையராஜாவுக்கும், சத்யாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

 

இவர்களின் இந்த தொடர்பு கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது. இதனால் இதை அறிந்த தங்கவில்லம்மால், தன் கணவரை கண்டித்துள்ளார்.

ஆனால் அவரோ உச்சநீதிமன்ற தீர்ப்பை கூறி, மிரட்டியுள்ளார். அதாவது உச்சநீதிமன்றம் கள்ளக்காதல் தவறில்லை என்று கூறியதை மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இளையராஜா, நான் சத்யாவுடன் வாழப்போகிறேன் என்று கூறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த தங்கவில்லம்மால், சத்யாவின் கணவர் ராமமூர்த்தி மனமுடைந்து இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இரண்டு பேரும் அவர்கள் வீட்டில் மயங்கி கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கும் தெரிவிக்கப்பட்டதால்,அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாரும் யரோடுனும் வழலாம் என்று சட்டம் உள்ளதால், யாரும் எதுவும் செய்ய முடியாது என கணவர் மிரட்டல் விடுத்ததாக தங்கவில்லம்மாள் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.